பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவம உருபுகள் 59

செய்யும் என்பது சில இடங்களில் முக்காலத்தையும் உணர்த்த வருகின்றது என்று கூறலாம். அது முற்றாக வரும்பொழுது பால் வேறுபாடு அற்று இயங்குகின்றது. அதில் பால் ஈறுகள் சேர்ந்து அமைவதில்லை. இவ்வாய்பாடுகளில் வரும் உவமை உருபுகள் கீழே தரப்பட்டுள்ளன.

11.9.1. செய் என்னும் வாய்பாட்டு உவம உருபுகள்

அமர், அவிர், இயல், உறழ், எதிர், ஏய், ஒங்கு, கொள், சேர், தேர், தோய், நவில், நாறு, நேர், புரை, பொரு, போல், மயங்கு, மருள், மலி, மாய், வீழ் என்பன செய் என்னும் வாய்பாட்டைச் சார்ந்தன ஆகும்.

11.9.2. செய என்னும் வாய்பாட்டு உவம உருபுகள்

ஆக, இகலிய, உறழ, என, என்ன, ஏய்ப்ப, ஒப்ப,

கடுப்ப, நான, நிகர்ப்ப, புரைய, பொற்ப, போல, மான என்பன

செய என்னும் வாய்பாட்டு உவம உருபுகளாம்.

11.9.3. செய்து என்னும் வாய்பாட்டு உவம உருபுகள்

உறழ்ந்து, எள்ளி, என்று, ஒத்து, செத்து, புரைஇ,

பொருது, போன்று, வென்று என்பன செய்து என்னும்

வாய்பாட்டு உவம உருபுகளாம்.

11.9.4. செய்யும் என்னும் வாய்பாட்டு உவம உருபுகள்

உறழும், உறைக்கும், எள்ளும், என்னும், ஏக்குறுஉம், ஏசும், ஏய்க்கும், ஒக்கும், ஒர்க்கும், கடுக்கும், நிகர்க்கும் புரையும், போலும், போன்ம், மருளும், மாய்க்கும், மானும், வவ்வும் என்பன செய்யும் என்னும் வாய்பாட்டு உவம உருபுகளாகும். இவை முற்றாகவும் எச்சமாகவும் வந்துள்ளன.

11.9.5. செய்த என்னும் வாய்பாட்டு உவம உருபு

ஆகிய, இகலிய, ஒத்த, ஓங்கிய, கொண்ட, சினைஇய, புரிந்த, பொருத, முரணிய, வாய்த்த, வென்ற என்பன செய்த என்னும் வாய்பாட்டு உவம உருபுகளாம்.

11.10. சால என்பது வினைக்கு அடையாக வரும் உரிச்சொல்லாகும். இச்சால ஒரே ஒரு இடத்தில் உவம உருபாக வந்துள்ளது. வேறு எங்கும் வராத தனிச்சிறப்பை இது பெற்றுள்ளது.