பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சங்க இலக்கியத்தில் உவமைகள்

11.11. ஏர் என்பது பெயர்ச்சொல் அமைப்போடு விளங்குவதாகும். ஏர் என்பது அழகு என்னும் பொருளினது. ஏர் எனினும் அழகு எனினும் ஒக்கும். அது வழக்காற்றில் உவம உருபாக விளங்குகிறது. ஏர் உவம உருபு என்பதைத் தொல்காப்பிய உவம இயல் உரையாசிரியராகிய பேராசிரியரும் ஒப்புக் கொள்கிறார். தொல்காப்பியச் சூத்திரம் 29க்கு எழுதிய உரையின் கண் இப்பாடல் அடிகளை எடுத்துக்காட்டுவர்.

மழையேர் ஐம்பால் - அகம். 8/15

மணியேர் ஐம்பால் என்பதும் பாடமாக உள்ளது. சில தொடர்கள் ஏர் என்றும், நேர் என்றும் பிரிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன.

மணியேர் மாணலம் சிதையப் பொன்னேர் பசலை.

-அகம். 172/17-18

இத்தொடரின்கண் மணியேர் என்பதில் ஏர் என்று தெளிவாகப் பிரிக்கலாம். பொன்னேர் என்பதைப் பொன் ஏர் என்றும், பொன் நேர் என்றும் பிரிக்கலாம். எனவே ஏர் என்றும், நேர் என்றும் பிரிக்கத்தக்க வகையில் சில தொடர்கள் அமைந் துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

11.12. முற்று வினை வடிவங்கள்

இவ் எச்ச வடிவங்களும் பெயர் வடிவங்களும் அன்றி முற்று வடிவங்களும் உவம உருபுகளாக வந்தன. அவை உறழ்ந்தோள், ஒத்தனை, போந்தது, போன்ற, போல்க முதலியன ஆகும். இவை முழுமையான முற்று வடிவங் களாகும்; பால் ஈறுகளும் கால இடைநிலைகளும் தெளிவாகப் பெற்றுள்ளன.

11.13. குறிப்பு வினை வடிவங்கள்

அற்று, அன்னது, அனையர் அன்னோர், அணையது, அனைய, அனையவை, இற்று, இணையள் ஆகிய இவை குறிப்புவினை வடிவங்களாம்.

11.14. பெயர் வடிவங்கள்

ஏர், ஒப்பின், உருவின், புரையுநள் முதலியவை பெயர் வடிவங்களாகும்.