பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 83

பெருந்துறை என்ற கரையோர மணலுக்கு உவமிக்கப் பட்டுள்ளது. தலைமகள் தன்னைப் பல்காலம் முயங்க வேண்டும் என்று கூறும் தலைவனும் அவள் முயக்கத்திற்குப் பொருநை நதியின் மணலை உவமைப் படுத்துகின்றான். பகைவரின் போர்க்களத்தில் கொல்லப்பட்ட யானைகள் விண் மீன்களிலும் மழைத்துளியிலும் மிகுதியாகும் என்று கூறி சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களும் அடுக்கி உவமைகளாகக் கூறப்படுகின்றன. கடலின் நீர்த் துளிகளும், கடற்கரை மணலும், மழைத்துளியும் ஒன்றாகக் கூட்டி எண்ணிக்கை அளவாகக் கூறப்படுகின்றது. வானத்து விண்மீன்களும் மழைத்துளிகளும் ஒன்றாகக் கூட்டி உரைத்து அவற்றை எண்ணிக்கை அளவாகவும் கூறியுள்ளனர்."

1.4.1 வரையறைக்கு உட்படாத மிக்க அளவுகள் மேற்கூறப்பட்ட பொருள்களின் தொகுதியால் கூறப்பட்டன என்பது அக்காலச் சொல்லியல் மரபாகக் கொள்ளக் கிடக் கின்றது. அவை உவமைகளாக நின்று எண்ணிக்கையை உணர்த்தத் தொடங்கின. இப்பொருள் ஒரு சில இடத்தோடும் மன்னர்களோடும் தொடர்புபடுத்திச் சுட்டப்பட்டன என்பது மேலே காட்டிய சான்றுகளால் தெரிய வருகிறது. 1.5. சொற்பொருள் மாறல்

ஒரு பொருளை இயல்பாக உணர்த்தும் சொல் அப் பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை உணர்த்துவது ஆகு பெயரின் இலக் கணம் என்பர். அவற்றுள் உவமை ஆகு பெயரும் ஒன்றாகும், இதனை உவமைச் சொல்லியல் மரபினையொட்டிச் சொற் பொருள் மாறல் என்னும் உத்தியாகக் கூறலாம்.

1.5.1. காளை என்பது எருதை உணர்த்தும் சொல்லாகும். அஃது அஞ்சாமல் எதிர்த்துப் போரிடும் தறுகண்மையை உடைய வீரனை உணர்த்துகிறது. புறப் பொருள் பாடலில் வீரனையும், அகப்பொருள் பாடலில் பாட்டுடைத் தலை வனையும் உணர்த்தும் சொல்லாக வழங்குகிறது: இச்சொல் சங்க இலக்கியத்தில் பயின்று வருகிறது.

1. அகம். 93/16-23 2. புறம். 302/9-11

3. புறம். 198/18.23 4. புறம். 367/16-18.

5. நற். 184/2; 271/4; 293/9; பரி. 8/86; 11/46; அகம். 221|6;

புறம். 303/3, 308/2; 334/11 பத். 7/182