பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.6. மிகைபடக் கூறல்

உள்ளதை உள்ளவாறு கூறி அழகுபடக் கூறுவதைத் தன்மையணி என்பர். உவமைகளும் மிகப் பொருத்தமாக மிகுதிப்படுத்தாமல் கூறுவதைத் தன்மை உவமை அணி என்று கூறலாம். பொதுவாகச் சங்க இலக்கியத்தில் உயர்வு நவிற்சி மிகுதியாக இல்லை என்னும் கருத்து உள்ளது. எனினும் ஒரு சில உயர்வு நவிற்சிகளும் இல்லாமல் இல்லை. இவ் உயர்வு நவிற்சிக்கு வியப்பு, அவலம், கற்பனை காரணம் ஆகின்றன. மிகுதிப்படுத்திக் காண்பதில் ஒரு தனி அழகைக் காண்கின்றனர். உவமை எப்பொழுதும் பொருளைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உயர்ந்த தாக உடைய பொருளைக் கூறும் பொழுது சிறிது மிகைப் படுத்தியும் கூறுவது இயல்பாகி விடுகிறது. யானையை மலைக்கும், போர்ப் படையைக் கடலுக்கும், உயர் கட்டடங்களை வானத்துக்கும், மனிதர்களின் பண்புகளை ஐம்பெரும் பூதங்களாகிய வான், மண், நீர், தீ, காற்று முதலிய வற்றிற்கும் உவமைப்படுத்துவதில் மிகைபடக் கூறல் இயல்பாக அமைகிறது. இவை தவிர்க்க முடியாத உயர்வு நவிற்சிக் கூற்று களாகும். இவை மிகுதியாக இவ்உவமை வழக்குகளில் பயின்று வருவதால் அவை உயர்வு நவுற்சியாகக் காணப்படுவது இல்லை. அவை இயல்பு வழக்குகளாக அமைந்துவிட்டன.

1.6.1. இவையே அன்றி ஒரு சில கூற்றுகள் உயர்வு நவிற்சி நன்கு வெளிப்படும் வகையில் மிகைப்பட்ட உவமை களைத் தாங்கியுள்ளன. அவை அவர்கள் கற்பனைத் திறனைக் காட்டுகின்றன. சோறு வடிக்கப்பட்ட கொழுங்கஞ்சி ஆறு போலப் பரந்து ஒழுகியது என்று மிகைப்படக் கூறல் உயர்வு நவிற்சிக் கூற்றாகும்.

சோறு வாக்கிய கொழுங்கஞ்சி

ஆறு போலப் பரந்தொழுகி. - பத். 9,4-15

இவை வியப்பின் காரணமாகவும், பாராட்டும் உள்ளத்தின் காரணமாகவும் மிகுதிபடக் கூறப்பட்ட ஒன்று ஆகும்.

1.6.2 மிகுதிபடக் கூறுதலுக்குக் கற்பனையும் வியப்பும் காரணமாதலோடு உணர்வு மிகுதியும் காரணம் எனலாம். பொதுவாகத் துன்பத்தை மிகுதிப் படுத்திச் சொல்லுதல் மனிதன் இயல்பு ஆகும். கண்களில் பெருகிய நீர் குளம் போலப் பரந்து