பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 91

1.8.2.2. மாரிக் காலத்தோடு தொடர்பு பெற்ற உவமைகள் பின்வருமாறு:

1. மாரிக் கொக்கு:

மாரிக் கொக்கின் கூரலகு அன்ன

குண்டுநீர் ஆம்பல். -நற். 100/2-3.

2. மாரிக் குருகு:

அகல்வயல்

கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ

மாரியங் குருகின் ஈரிய. -அகம். 235/11-13

3. மாரிக் குன்றம்:

மாரிக் குன்றத்துக் காப்பாளன்னன்

தண்பனி வைகிய வரிக் கச்சினனே. -ஐங். 206/2-3

4. மாரி யானை:

ஆரம் நாறும் மார்பினன்

மாரி யானையின் வந்துநின்றனனே. -குறு. 161/4-5

5. மாரிக்காலத்து மலர்கள் : மழைக்காலத்திலேயே மலர் கள் மலர்ச்சி பெறுகின்றன. மேலும் நீர் ஒழுகும் மலர்கள் ஒரு சில உவமப்படுத்தப் படுகின்றன. மாரிக்காலத்து மலர்கள் பொது வகையாகவும் சிறப்பு வகையாகவும் உவமைகளாக அமைகின்றன.

அ. பொது: மலர்கள் பொதுவாக மகளிர் கண்களுக்கு உவமையாக வருகின்றன. மாரியால் நனையப் பெற்ற மலர், நீர் பனித்து ஒழுகும் கண்களுக்கு உவமையாக வந்துள்ளது.

மாரி மலரின் கண்பனி வருமே. -ஐங். 19/5

மகளிர் கூந்தல் நாறுகின்ற சிறப்பைக் கொல்லி மலையில் கார்காலத்து மலர்கள் தரும் மணத்துக்கு உவமைப்படுத்தி யுள்ளனர். ஈண்டுக் காலமே யன்றி இடமும் சார்பு பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.

பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்

கார்மலர் கடுப்ப நாறும் ஏர்நுண் ஒதி -அகம். 208/22-24