பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சங்க இலக்கியத்தில் உவமைகள்

ஆ. சிறப்பு

பொதுப்படையாக மழை நீரால் நனைந்த மலர்களும் மாரிக் காலத்து மலர்களும் உவமையாக அமைகின்றன. ஒரு சில சிறப்பு மலர்களும் அவற்றின் தனித்தன்மை கருதி உவமை களாக அமைக்கப்படுகின்ற்ன. அவை மாரிக் காலத்திலேயே மலரும் மலர்கள் என்று கருத வேண்டியுள்ளது.

மாரிப் பித்திகம்

நீர் கலுழும் மகளிரின் கண்கள் மாரிக் காலத்தில் மலரும்

பித்திகைப்பூவின் ஈரம் படிந்த இதழ்களுக்கு உவமிக்கப் பட்டுள்ளன.

மாரிப் பித்திகத்து ஈரிதழ் புரையும் அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்.

-அகம். 295/17-18.

இப்பித்திகை முகை மாரிக் காலத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்பது மற்றொரு சான்றாலும் புலப் படுகிறது.

மாசிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை -குறு. 168/1

இதே தொடர் அமைந்த செய்தி குளிர்ச்சி பொருந்திய மகளிரின் கண்களுக்கு உவ்மையாக மற்றோர் இடத்தில் வநதுளளது.

கார்ப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்.

-அகம். 22/5-7

மாரிப் பீரம்

பீர்க்கம் பூவும் மழைக்காலத்தில் பூக்கும் பூ எனத் தெரிகிறது. மாரிக்காலத்தில் பீர்க்கம் பூவைக் கொண்டு தன் பசலை நிறத்தைத் தலைவனிடம் உணர்த்தலாம் என்று அறிவிக்கின்றாள். பசலை நிறத்திற்கு இம்மாரிப் பீர்க்கம் உவமிக்கப்பட்டுள்ளது.

இன்னள் ஆயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி நம்படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத்து அவர்சில கொண்டே. -குறு. 98/1-5