பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் மரபுகள் 97

1.8.3.4. கொல்லி மயில்

ஓரி என்னும் குறுநில மன்னன் ஆண்டதால் கொல்லி மலை புகழ் வாய்ந்ததாக விளங்கியது அவன் சிறந்த கொடை வள்ளலாக விளங்கினான் என்பது தெரிகிறது. பொதுவாக மகளிரின் சாயலை மயிலுக்கு உவமைப் படுத்துவர். ஈண்டுச் சிறப்பாகக் கொல்லி மலையில் இருக்கும் மயில் மகளிரின் கூந்தலுக்கு உவமைப் படுத்தப்பட்டுள்ளன.

மாரி வண்மகிழ் ஒரி கொல்லிக் கலிமயிற் கலாவத்து அன்ன இவள் ஒலிமென் கூந்தல். -நற். 265/7-9

1.8.3.5. கொல்லிப் பாவை

பொதுவாக மகளிரின் நலத்தையும் அழகையும் பாவைக்கு உவமைப்படுத்துதல் அக்கால மரபாக விளங்கியது. அப்பாவை அநேகமாகக் கொல்லிமலைப் பாவையை உணர்த்தியது என்றும் கூறலாம். கொல்லிப் பாவை உவமை யாக வருதல் பயின்ற வழக்காக இருந்தது என்பது கீழ்வரும் சான்றுகளால் தெரிகின்றது.

பாவை யன்ன வனப்பினள் -நற். 302/6

பாவை அன்ன நல்லோள் கணவன் -பதி. 61/4

இவை இரண்டும் கொல்லிச்சார்பு பெறாமல் அமைந்த உவமைகளாம். இவ்வாறு வருதல் பெருவழக்கு. பொதுவாக இப் பாவைகள் பொது மன்றங்களில் வைக்கப்பட்டிருந்தன என்பது தெரிகிறது இத்தகைய மன்றங்களுள் ஒன்றாகக் கொல்லி மலைப் பாவை வைக்கப்பட்ட இடம் ஆக இருந்திருக்க வேண்டும். இது அழகிய நிறம் திட்டப்பட்ட சிறிய வடிவத்தால் இயன்றது என்றும் தெய்வம் வந்து எழுதி அமைத்தது என்றும் கருத்து நிலவுகிறது. 'கடவுள் எழுதிய പtഞഖ് என்னும் தொடரால் இது சிறப்பிக்கப்படுகிறது. மற்றும் இது 'ஒரியாண்ட கொல்லி மலை' எனப்படுவதால் தனிச் சிறப்புப் பெறுகிறது."

1. நற், 30|16, 301/7, 319/7-8; குறு. 195/6-7; ஐங். 221/2; 307/4;

375|1-2ட பதி. 61/4; 88/28-29; கலி. 56/7.

2. அகம். 158/11-14.

3. அகம். 62/13.