பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு குழந்தைகள் 21 கூட ஆர்வம் காட்டாமல்,தரையில் சுருண்டு முடங்கினாள். ஆகவே, மிஷ்கா சிறிது கவலையுடன் அவளை எச்சரித்தான். "நீ தூங்கிவிடாமல் கவனித்துக் கொள். இல்லாவிட்டால் குளிரில் விறைத்துச் செத்துவிடப் போகிறாய். ஏய், காட்கா!" "உனக்கு அந்தப் பயம் வேண்டாம். நான் சாக மாட்டேன்" என்று காட்கா சொன்னாள். அவள் பற்கள் ஒன்ரோடு ஒன்று அடித்துக் கொண்டு நடுங்கின. மிஷ்கா இல்லையென்றால், காட்கா உண்மையாகவே குளிரில் விறைத்துச் செத்துவிடக் கூடும். ஆனால், கிறிஸ்துமசுக்கு முந்திய நாள் மாலை வேளையில் அவள் அப்படி ஏதாவதொரு அல்பமான செயலைச் செய்து விடாதபடி தடுத்தே தீருவது என்று விஷயம் அறிந்த அந்தச் சின்னப் போக்கிரி திட வைராக்கியம் கொண்டு விட்டான். "எழுந்திரு. நீ கீழே கிடப்பது மிகவும் மோசமாகும். எழுந்து நிற்கிற பொழுது நீ பெரியவளாகி விடுகிறாய். அப்பொழுது குளிர் உன்னே அணுகுவதற்குச் சிரமப்படும். பெரியவற்றை பொதுவாகக் குளிர் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் குளிரை விட அவை பெரியவை. உதாரணத்துக்கு, குதிரைகளை எடுத்துக் கொள். அவை குளிரில் அடிபட்டுச் சாவதே கிடையாது. மனிதர்கள் குதிரைகளே விடச் சிறியவர்கள் அதனால் தான் அவர்கள் சதா குளிரினால் விறைத்துப் போகிறார்கள். எழுந்திரு. நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீ என்ன! நம்மிடம் முழுசாக ஒரு ரூபிள் சேரட்டும். நாம் விழா கொண்டாடுவோம்.' காட்கா உடல் முழுவதும் நடுநடுங்க எழுந்துகின்றாள்.