பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

மன்னித்து மறப்பான். பழிவாங்க அவன் மனம் இடம் தராது.

தீங்கு செய்தவர்களுக்குத் தீங்கு செய்ய மாட்டான். அவர்களை வருந்தச் செய்து, திருத்துவான்.

மக்களின் மனக்கவலையையும், வருத்தத்தையும் கண்டு பரிவிரக்கப் படுவான். தன்னால் முடிந்த யுதவியைத் தயங்காமல் செய்து குறையைப் போக்கி அப்படி அவன் நல்லவனாக நடப்பதின் பலனை அவன் நுகர்வான்.

ஆத்திரமாக இருப்பவர்களை அவன் அமைதிப் படுத்துவான். சமுதாயத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் தவிர்த்து நட்பமைதியை உண் டாக்குவான். எ ல் லோ ரு ம் நல்லெண்ணம் படைத்து எங்கும் அமைதி நிலவப் பாடுபடுவான். அவன்தான் அனைவரின் அன்பையும் பாராட்டை யும் பெற்று வாழ்வான்.

நன்றி

மரக்கிளையின் சாறு வேரில் சேருவதைப் போல், பாயும் ஆறுகள் கடலில் சேருவதைப்போல, நன்றியுள்ள ஒருவன் தான் பெற்றதை மீண்டும் செய்திடும் கடமையாகக் கருதுவான். உதவி புரிந்த வர்களிடம் அன்புடனும் மதிப்புடனும் நடந்து கொள்வான். தான் பெற்ற கொடையை மீண்டும்