பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 165

"மூலமும் நடுவும் ஈறும் இல்லதுஓர் மும்மைத்து ஆய

காலமும் கணக்கும் நீத்த காரணன்" என்று சுந்தர காண்டம் பிணி வீட்டுப் படலத்திலும்,

"நல்லறமும் மெய்மையும் நான்மறையும் நல்லருளும்

எல்லையில் ஞானமும் ஈறுஇலா எப்பொருளும் தொல்லைசால் எண்குணனும் நின்சொல் தொழில்செய்க" என்று இரணியன் வதைப்படலத்திலும்,

"நெற்றியின் நின்றுஒளி நெடிது இமைப்பன்

கொற்றவன் சரம்எனக் குறிப்பின் உன்னினான், சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான் முற்றிய பொருட்கெலாம் முடிவு ளான்தனை" என்று கும்ப கருனன் வதைப்படலத்திலும் கம்பன் குறிப்பிடுகிறார்.

கம்பனது முயற்சியைப்பற்றி, "எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்

கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

"எவரும் யாவையும் எல்லாப் பொருளும்

கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி அவரெம் ஆழியம் பள்ளி யாரே' என்றும்,

"உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்

பொருவாகி நின்றான் அவன் - எல்லாப் பொருட்கும் அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே" என்றும் நம்மாழ்வார் பாடுகிறார்.

3. அமரர்களான தேவர்களெல்லாம் ஒன்று திரண்டு கூடிக் கை குவித்து வணங்கி வாழ்த்துகின்ற திருமாலே உன்னுடைய செந்தாமரை மலர் போன்ற இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்து முடித்தாயே, அந்தத் திருவடிகள்தாமே அன்று