பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பாண்டவர்களுக்காகத் துாது நடந்த திருவடிகளாம். நரசிம்மமாகித் துணினின்றும் வெளிப்பட்டுப் பகைவனான இரணியனைக் கொன்றொழித்த இறைவனே, இது என்ன மாயமோ, இந்தச் செய்தியும் நமக்குப் பெரிதும் வியப்பை அளிக்கிறது; நமது அச்சத்தைப் போக்குகிறது.

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்" என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவதற்கொப்பாக ஆழ்வார்களும் பல பாடல்களில் பாடுகிறார்கள். "இந்திர னோடு பிரமன்

ஈசன் இமையவ ரெல்லாம் மந்திர மாமலர் கொண்டு

மறைந்துஉவ ராய்வந்து நின்றார்" என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

"வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி

எதிர்திசை நிறைந்தனர்" என்றும்,

"அலங்கலந் தொடையல்கொண் டடியினை பணிவான்

அமரர்கள் புகுந்தனர்" என்றும்,

"அந்தரத் தமார்கள் கூட்டங்க ளிவையோ

அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ இந்திர னானையும் தானும்வந் திவனோ

எம்பெரு மான்உன் கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க

இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்!" என்று தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாகப் பாடுகிறார்கள். இன்னும்,

"ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே

யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்

கந்தரு வர்.அவர் கங்குலு ளெல்லாம் மாதவர் வானவர் சாரண ரியக்கர்

சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்" என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் அரங்கத் தம்மானைப் பள்ளியெழுந்தருளும்படி பாடுகிறார்.