பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 173

வெபெருமான் கோயிலை வலம் வந்து வணங்கினான். "இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலம்கொண்டு” என்று காப்பிய அடி குறிப்பிடுகிறது. பின்னர்த் திருமாலின் சேடம் வந்து சேருகிறது.

"குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென,

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர்நின் றேத்த” சேரநாட்டு வேந்தனான செங்குட்டுவன் ஆட்சி நீடுழி வாழ்கவென, அவன் வெற்றி பெறுவானாகவென, திருவனந்த புயத்துத் திருக்கோயில் பாம்பனைமீது பள்ளிகொண்டு யோக நித்திரையில் அமர்ந்துள்ள திருமாலின் சேடத்தை மன்னனுக்குக் கொடுத்து வாழ்த்தினர். அச்சேடத்தை மன்னன் தனது தோள்களிலே அணிந்துகொண்டான்.

ஆயர் முதுமகளான மாதரி, கண்ணகிமீதும் கோவலன் துேம் மிகுந்த அன்பு செலுத்தியதாலும், ஆய்ச்சியர் குரவை ஆடிய புண்ணியத்தாலும், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எழுப்பி விழாவெடுத்தபோது அதைக் காணும் பாக்கியத்தைப் பெற மறுபிறவி எடுத்து, அ1 வனையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு செய்யும் சேடக் குடுமியின் மகளாகத் திருவனந்தபுரத்தில் பிறந்தாள் என்று சிலப்பதிகாரக்கதை குறிப்பிடுகிறது.

"ஆயர் முதுமகள் ஆயிழை தன்மேல்

போய பிறப்பில் பொருந்திய காதலின் ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் திருமால் வழிபாடும் திருவிழாக்களும் அக்காலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறது வன்பதை அறிகிறோம்.

இன்னும் ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே அதற்கு () ன் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் திருமால்