பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 175

“பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு

பலகோடி நூறா யிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா,உன்

செவ்வடி செவ்வித் திருக்காப்பு" என்று திருப்பல்லாண்டுக் காப்புப் பாடல் தொடங்குகிறது. திருமாலுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்தும் இந்த அரிய பாடல் தொகுப்பு

"அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி

ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற

மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறை யும்சுடர்

ஆழியும் பல்லாண்டு படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச

சன்னியமும் பல்லாண்டே' என்று பட்டர்பிரான் பெரியாழ்வார் பாடியுள்ள இந்த அரிய வழிபாட்டுப் பாடல் பல்லாயிரம் பல்லாயிரம் பல கோடி நூறாயிரம் முறை திருமால் பக்தர்களால் விரும்பிப் பாடப்படுகிறது.

பக்தர் குழுக்களும் தொண்டர் குழுக்களும் கூட்டாகச் சேர்ந்து திருமாலுக்கு வழிபாடு செலுத்துவதும், பெருமாள் சேவை செய்வதும் பழக்கத்தில் இருந்ததைப் பெரியாழ்வார் பெருமான் தமது திருப்பல்லாண்டு பாடல்களில் குறிப்பிடுகிறார்.

"நாடும் நகரமும் நன்கறி யநமோ

நாராய னாயவென்று பாடும் மனமுடைப் பத்தருள் ளிர்வந்து

பல்லாண்டு கூறுமினே" என்று பக்தர் குழுவினரைக் கூவியழைக்கிறார்.

"தொண்டக் குலத்தி லுள்ளிர் வந்தடி தொழுது

ஆயிரம் நாமம் சொல்லி - பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல்

லாயிரத் தாண்டென்மினே' என்று, சாதிகுல வேறுபாடின்றி, அனைவரும் திரண்டு ஒன்றுகூடி பெருமாளுக்குப் பல்லாண்டு பாட வரும்படி ஆழ்வார் அனைவரையும் வேண்டுகிறார்