பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருவோணத் திருவிழாவைப்பற்றிப் பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.

"விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு

வோனத் திருவிழாவில் படுத்தபைந் நாகனைப் பள்ளிகொண் டானுக்குப்

பல்லாண்டு கூறுதுமே !” என்று பாடுகிறார்.

கண்ணன் திருவவதாரச் சிறப்புப்பற்றி மக்கள் திருவிழாக்கோலம் கொண்டு கொண்டாடுவதைப் பெரியாழ்வார் பெருமான் மிகச்சிறப்பாகத் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார்.

மக்கள் ஒடியாடுவார்கள், பாடுவார்கள், பல்பறை கொட்ட நின்று ஆடுவார்கள். ஆயர்பாடி மக்கள் உறியை முற்றத்துருட்டி நின்றாடுவார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு

"பத்து நாளும் கடந்த இரண்டாம்நாள்

எத்தி சையும் சயமரம் கோடித்து மத்த மாமலை தாங்கிய மைந்தனை உத்தா னம்செய் துகந்தனர் ஆயரே" என்று ஆயர் பாடி மக்கள். கண்ணனின் அவதாரச் சிறப்புகளைப்பற்றி விழாவெடுத்துக் கொண்டாடுவதைப் பாடுகிறார். மக்கட்பேறு

மக்கட்பேறு ஒரு பேரின்பமாகும். குழந்தை பிறப்பது தாய்க்கு ஒரு தனி நிலை; ஒரு தனித் தன்மையான உணர்வு நிலை; ஒரு தனி மகிழ்ச்சி ஒரு தனி ஆனந்தம் ஒரு தனிப் பெருமை. பிள்ளையில்லாதவளை மலடி என்று கூறும் நாடு பாரத நாடு என்று பாரதி குறிப்பிடுகிறார். எனவே, பிள்ளைப் பேறு பெறுவதை ஒரு பெருமையாக, ஒரு சமுதாய அந்தஸ்தாக இந்தியப் பெண்மை கருதுகிறது. மற்றவர்களுக்கு இளம் தலைமுறையினருக்கு, புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக் கூறுவதற்கு குழந்தை பெற்றுள்ள தாயைத்தான் அனைவரும் விரும்புவர். குழந்தை பெற்ற பின்னர்தான் அப்பெண், தாய் என வழங்கப்படுகிறாள். தாய் தனது