பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சீரணங் கமரர் பிறர்.பல

ரும்தொழு தேத்தநின்று வாரணத் தைமருப் பொசித்த பிரான்என் மாதவனே !” என்று அனைவரும் தொழும் ஆண்டவன் ஏழு உலகங்களுக்கும் நாதன் வேதமயன் காரணம், கிரிசை, கருமம் - இவைகளுக்கு முதல்வன், கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த பிரான் எந்தை நாரணனே என்று திருமாலை வழிபடுகிறார். o

திருமால் புகழையே பாடும்படி ஆழ்வார் அனைவரையும் அழைக்கிறார்.

ஐந்து புலன்களும், ஐந்து பொறிகளுழ் கட்டுப்பட்டு எல்லா நலன்களும் நிறைந்த நாட்டிற்குச் செல்வதற்கு, அத்தகைய உயர்ந்த நிலையை அடைவதற்குத் திருமால் புகழைப் பாடுக என்று அனைவரையும் அழைக்கிறார்.

"புலனைந்து மேயும் பொறியைந்தும் நீங்கி

நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின்ஒ வாதே !” என்று பாடுகிறார்.

எனக்கு என்ன நிலை ஏற்பட்டாலும், சுவர்க்கம் கிடைத்தாலும் சரி, நரகம் கிடைத்தாலும் சரி, எனக்கு எத்தகைய நற்பிறவியோ வேறு பிறவியோ கிடைத்தாலும் எனக்கு என்ன கதி கிடைத்தாலும் உன்னை மறவேன் என்று கண்ணனை நினைந்து பாடுகிறார். தன்னலத்தினால் தமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஆண்டவனை ஆழ்வார் வழிபடவில்லை. அந்தப் பெருமாளை வழிபடுவதே தமது வாழ்க்கையின் கடமையாகப் பக்தியை ஆழ்வார் கருதுகிறார். இது ஒர் அடிப்படையான கொள்கை நிலையாகும். இதுவே பக்தி இயக்கத்தின் அடிப்படையான நிலைப்பாடாகும். உலக நன்மைக்காக ஆண்டவனை வழிபடுவது தங்கள் கடமையாக ஆழ்வார்கள் கருதினார்கள்.