பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 209

"சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்

இறப்பில் எய்துக எய்தற்க, யானும் பிறப்பில் பல்பிற விப்பெரு மானை மறப்பொன் றின்றியென் றும்மகிழ் வேனே" என்று நம்மாழ்வார் பாடியிருப்பதைக் காண்கிறோம்.

திருமால் திருத்தலங்களுள் திருமாலிருஞ்சோலையும் திருவேங்கடமும் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த இரு திவ்ய தேசங்களையும் நம்மாழ்வார் பெருமான் சிறப்பித்துப் பாடுகிறார். இப்பாசுரங்கள் மிகவும் பிரபலமானவைகளாகும்.

"கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை தளர்வில ராகில் சார்வது சதிரே !” என்று, உங்கள் இளமை தீர்வதற்கு முன்பாகச் சோலை மலைக்குச் சென்று, அத்திருமாலை வழிபடும்படி ஆழ்வார் அனைவரையும் வேண்டுகிறார்.

திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்து சேவிக்கும்படி, தலைதலைமுறையாக நின்று அனைவரும் பணிந்து வணங்கி மகிழுமாறு ஆழ்வார் வேண்டுகிறார். நம் வாழ்நாளெல்லாம், அப்பெருமானை வணங்கி வழிபாடு செய்து மகிழ வேண்டுமென்று உலகோரனைவரையும் வேண்டுகிறார்.

"ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம் தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து எழில்கொள் சோதிஎந் தைதந்தை தந்தைக்கே" என்றும், அதைத் தொடர்ந்து,

“எந்தை தந்தை தந்தைதந் தைக்கும்

முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே" என்றும் ஆழ்வார் பாடுகிறார். இது ஒர் அருமையான பாடல் தொகுப்பாகும். இப்பாடல் வழி நமது பாரம்பரியமும்,