பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சிலப்பதிகாரம், திவ்யப்பிரபந்தம் ஆகிய இரு நூல்களுமே தமிழ் மொழியின் மூல நூல்களின் பிரிவைச் சேர்ந்தவை. சிலப்பதிகாரம் தலைசிறந்த தமிழ்க் காப்பியம். இந்தச் சிறப்புமிக்க தமிழ்க் காப்பியம் மூன்று தமிழ்நாடுகளையும் ஒற்றுமைப் படுத்துகிறது; மூன்று தமிழ் மன்னர்களையும் புகழ்ந்து போற்றுகிறது; முத்தமிழையும் இணைக்கிறது.

III நெடிய்ோன் குன்றமும் தொடியோள் பெளவமும்

தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு மாட மதுரையும் பீடா ருறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும் அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்" என்று இளங்கோவடிகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த எல்லை களையும், தலைமையான நகரங்களையும், அங்கு அமைந்திருந்த ஆட்சியரை இணைத்துக் கூறுவதையும் காண்கிறோம்.

சிலப்பதிகாரக் காப்பியம் தமிழையும் தமிழகத்தையும், தமிழகத்தின் நாடு நகரங்களையும் தமிழ் மன்னர்களையும் தமிழ் மக்களையும், அவர்களின் நாகரிக வளர்ச்சியையும் சிறப்பித்துக் கூறும் அதே சமயத்தில் தமிழகத்துடன் பாரதத்தை இணைத்தே காண்கிறது; பிரித்துப் பார்க்கவில்லை. இக்காப்பியத்தில் பொதிகையும் இமயமும் விந்தியமும் சேர்ந்து காணப்படு கின்றன; கங்கையும் காவிரியும் வைகையும் சேர்ந்து காணப்படுகின்றன; புகாரும் அயோத்தியும் இதர பல நகரங்களும் கூறப்பட்டிருக்கின்றன.

"தெய்வம் தெளிமின், தெளிந்தோர் பேணுமின்" என்று குறிப்பிட்டுக் கூறுவதுடன் இறைவனையும் இறைவியையும் ஆறுமுகவேளையும் திருமாலையும் இராமனையும் பலராமனையும் குறிப்பிட்டுக் கூறுகிறது. இந்திரனுக்கு விழா வெடுப்பதை விவரிக்கிறது. அவ்விழாவைக் காண வடக்கே யிருந்து சிலர் வருவதையும் கூறுகிறது. திருவேங்கடமும் திருவரங்கமும் திருமாலிருஞ்சோலையும் திருவனந்தபுரமும் காப்பியத்தில் சிறப்பான இடங்களைப் பெறுகின்றன. ஆழ்வார்களின் பக்திப் பாடல்களுக்கு ஈடான ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

திவ்யப் பிரபந்தம் தமிழில் உள்ள சிறப்பான மூலநூல் வகையில்ானதாகும். சைவத் திருமுறைகளும் திவ்யப் பிரபந்தமும்