பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கூட்டமாகக் கூடி வந்து பெண்ணைக் கொண்டு செல்லுதலும், நாடும் நகரமும் ஊரும் அறியக் கல்யாணம் செய்துகொண்டு செல்வதுமான சமுதாயப் பழக்கங்களைப் பற்றி ஆழ்வார்,

" வேடர் மறக்குலம் போலே

வேண்டிற்றுச் செய்துஎன் மகளைக் கூடிய கூட்டமே யாகக்

கொண்டுகுடி வாழுங் கொல்லோ? நாடும் நகரும் அறிய #

நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப் பாய்ந்த பெருமான்

தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?” என்று பாடுகிறார்.

படைக்கலன்களையும் கருவிகளையும்பற்றி அவை களைத் திருமாலின் சின்னங்களாக,

" உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்

ஒண்சுட ராழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கல முடைய

மால்புரு டோத்தமன்” என்று குறிப்பிட்டு அழகாகப் பாடுகிறார். கோதை

கோவிந்தனைப் பாடினால் நமக்குக் கிடைக்கும் சன்மானம், நலவாழ்வு,

" நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே, தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அதன்பின்னே பால்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோ" என்று குறிப்பிடுகிறார்.

பசுக்களும் அவை தரும் பாலும், பாலிலிருந்து கிடைக்கும் தயிரும் வெண்ணெயும் நெய்யும் மோரும் மக்களின் வாழ்க்கையின் பகுதியாக இருப்பதை ஆழ்வார்கள் கண்ணனையும் ஆயர்பாடியையும் நினைத்து மகிழ்ந்து பக்திப் .ெ - ன் பாடுகிறார்கள்.