பக்கம்:சிவ வழிபாடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வமே சிவபெருமானே Selvamē Sivaperumaane யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் Yaanunaith thodarndhu sikkenap pidiththen எங்கெழுந்து அருளுவது இனியே. enggezhundhu arulluvadhu İniye. திருச்சிற்றம்பலம் சிறு குழந்தைக்குத் தாய் அதன் பசியை அறிந்து பால் கொடுப்பாள். அத்தாயைக் காட்டிலும் அன்பு கொண்டு, நீ பாவி ஆகிய என்னுடைய ஊனை உருக்கினாய் என் உள்ளே ஒளிபெருக்கினாய் அழிவு இல்லாத ஆனந்தம் ஆகிய தேனைச் சொரிந்தாய் வெளியிலேயும் இங்ங்னமே (நன்மைகள் செய்தாய்). அருள் ஆகிய செல்வத்தைத் தருபவனே! சிவபெருமானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பிடித்தேன். என்னை விட்டு நீ இனி எங்கே போவாய்? The Mother would feed the child with milk (perceiving its hunger). More than the mother you pitied me, You purified the flesh; You increased the inward light, You caused to flow the honey of imperishable bliss. In this way you transformed my outward body. Oh wealth (of grace)! Oh Lord Siva! I followed. and seized you. Where would you go? (34) மனைவி மக்கள் உறவினர் ஆகியவர் இடத்தில் காட்டும் ஆசையை அன்பு என்பார்கள். தொடர்பு இல்லாத பிறர் இடத்தும் பிறவுயிர்கள் இடத்தும் காட்டும் பரிவை அருள் என்பார்கள் . நம்மிடம் நெருங்கியவர் இடத்துக் காட்டும் அன்பைக் காட்டிலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதுதான் மக்கட் பண்பு என்பார்கள். இத்தகைய மக்கட்பண்பு உடையவர்களே உலகத்திலே எல்லாராலும் போற்றப்படுவர். அவர்கள்தான் இவ்வுலகத்தில் தெய்வமாகக் கருதப்படுவர். அவர் மனத்தில், தாமாகவே வந்து அன்பாகிய சிவம் குடிகொண்டிருப்பார்! 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/82&oldid=833678" இலிருந்து மீள்விக்கப்பட்டது