பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சியாங் கே-ஷேக் பிறகு, ஸன் யாட்-ஸென், 'நம்முடைய புரட்சியில் இந்த மனிதர் சூரராக விளங்குவார்; நம் புரட்சி இயக்கத்திற்கு இதேமாதிரி ஆசாமி தேவை' என்று சென் சி-மெய் என்ற நண்பரிடம் கூறினராம். ராணுவப் பயிற்சி முடிந்ததும், சீன அரசாங் கத்தில் பதவி பெறுவதை விரும்பாது, சியாங் தம்முடைய கல்வி, அநுபவம், உடல், உழைப்பு எல்லாவற்றையும் சீனத் தாய்க்கே அர்ப்பணம் செய்துவிட்டார். மஞ்சு ஆட்சியை ஒழிக்கவேண்டும், குடியரசு அமைக்கவேண்டும், தேசத்தைப் புனருத் தாரணம் செய்யவேண்டும் என்ற எண்ணங்கள் அவரை ஆட்கொண்டுவிட்டன. 1911-ஆம்u அக் டோபர் 10-வ ஆசாங் என்ற இடத்தில் புரட்சியின் போர் முரசு முதன் முதலாகக் கொட்டப்பெற்றது. பேரிகை ஒலி ஜப்பானின் தலைநகரான டோகியோ வுக்கும் எட்டியது. சியாங் தம் கண்பர் ஒருவரைச் சேர்த்துக்கொண்டு, ராணுவத்திலிருந்து 48-மணி நேரத்திற்கு ரஜா எடுத்துக்கொண்டு, வெளியே கிளம்பிவிட்டார். நேராகக் கடைக்குப் போய்ச் சாதாரண உடைகள் கொஞ்சம் வாங்கி அணிந்து கொண்டார். பழைய ராணுவ உடைகளையும் வாளே யும் தபால் பார்சல் மூலம் ராணுவக் காரியாலயத் திற்கு அனுப்பிவிட்டு, பெற்ற தாயையும், பிறந்த பொன் காட்டையும் நோக்கிப் புறப்பட்டுவிட்டார். 48-மணி நேரத்திற்கு ரஜா வாங்கிக்கொண்டு வந்தார். பின்னல் 84-வருவுங்கள் கழிந்தும் ஜப்பானிய ராணுவ வேலைக்குத் திரும்பிப் போகவே இல்லே!