பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII குண விசேஷங்கள் வலிமைகளிலே மதியை நிறுத்தி ஆழ்ந்த தியானம் செய்தால் யானேயின் பலம் முதலியவை கைகூடும்.' - பதஞ்சனி சியாங் கர்மவீரர். தீவிரமான சிங்தனு சக்தியும், சிந்தனையைச் செயலாக்கும் திறனும் அவருக்கு ஒருங்கே அமைந்திருக்கின்றன. காற்றடிக்கும் திசையெல்லாம் சுற்றி அலையும் மரக்கலங்களைப் போன்றவர்கள் சாதாரண மனிதர்கள். கர்மவீரர் களோ, கொங்தளிக்கும் கடலில், கொடிய புயலையும் எதிர்த்து, தாம் கினைத்தபடியே குறித்த காலத்தில் குறித்த இடத்திற்குப் போய்ச் சேரும் மரக்கலங் க்ளைப் போன்றவர்கள். அவர்கள் எங்தக் காரியத் தையும் எண்ணியே துணிவார்கள், துணிந்தபின் எண்ணமாட்டார்கள். காரியம் கைகூடும் வரை இடையில் சோம்பலுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். வினைத் திட்பம் என்பது மனத் திட்பம். அவர்களுடைய மனத்திட்பமே அவர் களுடைய காலடியில் வெற்றியைக் கொணர்ந்து சமர்ப்பித்துவிடும். பெரிய காரியங்களைத் தொடங்கிய வுடனே வெற்றியை எதிர்பாராமல், கிடைக்கிற தோல்விகளைக் கண்டு கலங்காது, அவர்கள் காலம் கருதி இருப்பார்கள். இத்தனே அருங் குணங்களையும் சியாங் பெற்றிருக்கிரு.ர். * = பின்னல் நோக்கினல் மரணம் : முன்ல்ை நோக்கினல் ஆசை; ஆதலால் பார்வையை அங்தர் முகமாய்த் திருப்பவேண்டும் என்று கம்முடைய ஞானிகள் சொல்லுவார்கள். இந்த வித்தையிலும் சியாங் தேர்ந்தவராக இருக்கிரு.ர். பிள்ளைப் பருவத்திலிருந்தே அவர் தனியே ஒதுங்கிச்