பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சியாங் கே-வேடிக் கவனித்தால், அவர் சியாங்கின் மூலம் புரட்சியையே தம் நாயகனக வரித்துக்கொண்டார் என்பது தெளிவாகிறது. 'என்னே எடுத்துக்கொள், அப்பா 1 அக்காளைக் கீழே விடு ! நான்தான் உன்னுடைய பாப்பா!' என்று குழங்தைப் பருவத்தில் மெய்-லிங் தங்தையிடம் பிடிவாதம் செய்வது வழக்கம். அந்த மெய்-லிங் பின்னல் கோடிக்கன்னக்கான சீன மக்களின் பாப்பாவாக விளங்குகிருர். அவர்களுடைய இதய கமலங்களில் அவர் கிலேயான இடம் பெற்றிருக்கிரு.ர். அவர் பேரழகி. பெருஞ்செல்வமும், பெருங்குணமும் படைத்தவர். அவர் கல்வி அறிவும் இசைத் திறமையும், கலைகளில் ஆர்வமும் கொண்டவர். இவைகளோடு எல்லேயற்ற வீரமும் பெற்றிருக்கிரு.ர். அவருடைய அறிவும், திறமையும், ஆர்வமும், வீரமும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படுவதற்குச் சியாங் கே-வேடிக்கை அவர் மணந்து கொண்டதால் தான் சாத்தியமாயிற்று. சீனவில் அன்று முதல் ஏற்பட்டுள்ள ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவருடைய உழைப்பின் முத்திரையைக் காணலாம். அவரும் சியாங்கும். ஒருமனப்பட்டு உழைத்ததால் தான் தேசம் வலிமை பெற்று மேலோங்கி வளர முடிந்திருக்கிறது. ஒருவரிடம் குறைவாகவுள்ள குணங்கள் மற்றவரால் நிறைவாக்கப்படுகின்றன. சியாங்கின் வீரமும், உறுதியும், பிடிவாதமும் எல்லை கடந்து போனுல் கொடுமைகள் பெருகிவிடும். அப்படி ஏற்படாமல் இருப்பதற்கு மெய்-லிங் தேவியின் அருளும், அடக்கமும், ஆலோசனையும் காப்பாக இருக்கின்றன. சியாங்குக்கு மேல் காட்டுக் கல்வி கிடையாது. மெய்-விங் அக் கல்வியைக் கரைத்துக் குடித்தவர். வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள அவர் மிக்க உதவியாக இருக்கிரு.ர். கணவ ருடைய வாழ்க்கையில் அவர் எவ்வளவு உதவியா