பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சியாங் கே-வேடிக் பாதுகாப்புக்கும் வெற்றிக்கும் என்ன என்ன வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள அவருக்கு இப்போதுதான் சந்தர்ப்பம் வாய்த்தது. பணமும் போதுமான அளவு இல்லை. கஷ்டங்கள் மலேபோலே வழிமறித்து கின்றன. ஆல்ை, சியாங்கைப் போலவே சென் சி-மெய்யும் அசகாய சூரரானதால், சித்தம் கலங்காமல் திட்டங்களை வகுத்து வந்தார். போராட் டத்திற்கு உடற் சதையும் பொருளும் ஏராளமாகப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. சதை நம்மிடம் நிறைய இருக்கிறது. ஆனல் பொருள்தான் இல்லே " என்று சென் சொல்லி வந்தாராம். பொருள் சேகரிக்கவும் தக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சியாங் போர்வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். அத்துடன் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, அவை களின் மூலம் படைகளுக்கு வேண்டிய சாமான்களைச் சேகரித்து அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்து கொண் டிருந்தார். நவம்பர் 30-இல் நான்கிங் நகர் புரட்சிக்காரர். களால் தாக்கப்பட்டது. டிஸம்பர் 3-இல் அது அவர் களிடம் சிக்கிவிட்டது. அந்த மாதத்திலேயே ஒரு தாற்காலிகப் பார்லிமெண்டு அமைக்கப்பட்டது. பார்லிமெண்டு முதன் முதலாகச் செய்த தீர்மானம், பேரறிஞரும் பெருங் தலைவருமான டாக்டர் ஸன் யாட்-ஸ்ென் சீனக் குடியரசின் முதல் தலைவராக இருக்கவேண்டும் என்பதே. புரட்சி ஆரம்பித்த ப்ொழுது ஸன் சீமையில் இருந்தார். பிறகு டிஸம்பர் மாதக் கடைசியில்தான் அவர் ஷாங்காய் வந்து சேர்ந்தார். சியாங் கே-ஷேக்கும் மற்றத் தலைவர் களும் அவரை எதிர்கொண்டு அழைத்துவந்தனர். 1912-ஜனவரி முதல் தேதியில், நான்கிங் நகரில் ஏற் படுத்தப்பெற்ற குடியரசுக்கு அவர் தலைவராக அம்ர்ந்தார். அந்தச் சமயம் ஏற்பட்டிருந்த ஊக்கத் திற்கும், உத்ஸாகத்திற்கும், கோலாகலத்திற்கும்