பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சியாங் கே-வேடிக் ஒற்றுமைப்படுத்திப் Լյ6Ն) ԼDIT 6ԾT அரசாங்கத்தை அமைத்துவிடுவார் என்றும், அதல்ை தங்கள் வியா பாரம் இடையூறு இல்லாமல் கடந்து வரும் என்றும் கம்பி, யுவானே ஆதரித்து வந்தன. அதுதான் சமயம் என்று ஜப்பான் நிபந்தனைகளைப் போட ஆரம்பித்தது. அவைகளின்படி சீன ஜப்பானின் அடிமையாகப் போவதைத் தவிர வேறு வழியில்லை. புரட்சிக் காரர்கள் விழிப்படைந்தனர். யுவானத் தொலைத்து விட்ட பிறகும், அவர்கள் ஜப்பானே எளிதாகப் புறக் கணித்து விட முடியாது என்பது தெளிவாயிற்று. 1915- ஆம் u முழுதும் ஆங்காங்கே புரட்சிக் கலகங்கள் கடந்து வங்தன. அவ்வருவுக் கடைசியில், யுவான் தாமே சக்கரவர்த்தி என்று சொல்லிக் கொண்டு, பெகிங் நகரில் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். அன்னம் இருந்து அரசாண்ட இடத்தில் புன் மையான காகம் போய் உட்கார்ந்தால், அந்த மாறுதல் ஜனங்களின் மனக்கொதிப்பை உடனே கிளப்பிவிடும் அல்லவா ? பற்பல இடங்களில் மக்கள் கொதித்துக் கிளம்பிவிட்டார்கள். யுன் ன்ை மாகாணம் முதலில் சுதந்திரமாகக் கிளம்பியது. உடனே வேறு சில மாகாணங்களும் யுவானின் ஆதிக் கத்திலிருந்து விடுதலை பெற்றன. யுவான் நடுங்கிப் போய், சிம்மாசனம் வேண்டாம், ஆளே விட்டாற் போதும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார். தென் சீன முழுதும், உடனே அவர் ராஜீகாமா செய்து தொலையவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறியது. யுவான் நோயால் மிகவும் அவதிப்பட்டு, சிம்மாசனம் மட்டும் அன்றி, உலகத்தையும் விட்டே போய் விட்டார். அவர் சாகும்பொழுது, அவருடைய தளகர்த்தர்கள் அவருக்கு விரோதமாக இருந்தனர். அவர் சக்கரவர்த்தியாக இருந்தால் இவர்களுக்கு யதேச்சாதிகாரம் இல்லாமல் போயிருக்கும். முதலில் யுவானுக்கு உதவி செய்துவந்த ஜப்பானும், அவர்