பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 149 சொல்லி ஏமாற்றிச் சென்னை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆரம்பத்தில் சியாங் சந்தேகம் அடைந்து, சென் போகவேண்டாம் என்று தடுத்திருந்தார். ஆயினும், புரட்சியின் மேலிருந்த ஆசையால், சென் எளிதாக எதிரிகள் கையில் சிக்க நேர்ந்தது. அவர்களில் இருவர் சென்னைச் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த அதிர்ச்சியிலிருந்து சியாங் மீளுவதற்குப் பல நாள் ஆயிற்று. கோடிக் கணக்கான மக்களின் நலத்திற்காகச் சுய நலத்தை அறவே ஒழித்துவிட்ட ஒர் உத்தம நண்பரைப் பறிகொடுப்பது என்ருல் சாமானிய விஷயமா ? ஆளுல் புரட்சிப் பிடியில் சிக்கியிருந்த சீனவில், இறந்துபோன தலைவர்களைப் பற்றி எண்ணி ஏங்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை. ஏனெனில், போனவர் போக, அடுத்தாற் போல் மற்றவர்வளுக்கும் ஆபத்து விளேக்க எதிரிகள் காத்துக் கொண்டிருந்தனர். சென்னுக்குப் பின் ல்ை சியாங்கையும் பழி வாங்கிவிடுவதற்கு ஒற்றர்கள் வேலை செய்து வந்தனர். ஒரு சமயம் சியாங் போயிருந்த ஒரு வீட்டை அவர்கள் சுற்றி வளைந்துகொண்டுவிட்டனர். ஆனல் சியாங் அங்கே இல்லை. அவர், அந்த வீட்டில் தாம் தேடிப்போன நண்பர் இல்லாததால், ஒற்றர் களுக்குத் தெரியாமலே வெளியே போயிருந்தார். மறுபடி அங்கே அவர் வந்து பார்த்தபொழுது ஒற்றர்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மெதுவாக கழுவிவிட்டார். - இந்தச் சமயத்தில்தான் ஜப்பான் 21 கி.பக்தனே களைத் தயாரித்து, சீன அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது. யுவானுக்கு. ஜப்பான் பக்க உதவியாக நின்று கடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து வந்தது. மற்ற வெளி நாடுகளும், யுவான் பலசாலியாயிருந்து சீனவை