பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 151 சிம்மாசனம் ஏறுவதைச் சகிக்கவில்லை. முன்னல் இதே யுவான் கொரியாவில் ஜப்பானுக்கு எதிராகப் போர் புரிந்த ஒரு தளகர்த்தராக இருங்தார் என்பதை ஜப்பான் மறக்கவில்லை. நாலு வழியிலும், மரணத் தறுவாயில் அநுதாபம் காட்டுவதற்கு யாரும் இல்லாமல், புதிதாக வந்த யுவான் சக்கரவர்த்தி தேக வியோகமாகிவிட்டார். யுவான் வீழ்ந்ததும், ஆங்காங்குள்ள தளகர்த் தர்கள் அதிகாரத்திற்குப் போட்டிபோட ஆரம்பித் தார்கள். எங்கும் குழப்பம் ஆரம்பித்தது. போலிப் பார்லி மென்டுக்கு ஒருவர் பின் ஒருவராகத் தலைவர்கள் தோன்றினர்கள். புரட்சியின் வளர்ப்புப் பண்ணையாக இருந்த கான்டன் பகுதியிலும் போர் வெறி பிடித்த பிரபுக்கள் ஆதிக்கம் பெற்றனர். மூன்ருவது புரட்சி கடந்ததன் பலன் பல பிரபுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வங்து முடிந்தது. சமயம் வந்துவிட்டது என்பதை உணர்த்த ஸன் யாட்-ஸென், உடனே சியாங் முதலிய கண்பரைக் கலந்து கொண்டு, கான்டன் நகருக்குச் சென்று, சேஷப் பார்லிமெண்டைக் கூட்டி வைத்து, ராணுவ சர்க்கார் ஒன்றையும் அமைத்துவிட்டார். அவரே சேபைதியாகவும் பதவி ஏற்றுக்கொண்டார். வடக்கே போலிப் பார்லிமென்டின் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருந்த பெங் குவோ-சாங், அவருடைய நண்பர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்று ஸன் பிரகடனம் செய்தார். வடக்கே இருந்த யுத்த வெறியர்களை அடக்காமல் புரட்சி முற்றுப் பெருது என்பதை எல்லோரும் ஏகமனதாக ஒப்புக்கொண் டனர். ஆல்ை சுயநலமும், பதவி வேட்கையும், பொருமையும் கொண்டுள்ள தளகர்த்தர்களே கம்பி எங்தப் பெரிய காரியத்தையும் செய்ய முடியாமல் இருந்தது. லைன்னேடு கூடவே இருந்த அலு யுங்-டிங்