பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 1.59 அநுபவம் பெற்றிருந்தார். ஸன் அவரிடம் மிகுந்த கம்பிக்கை வைத்தார். கோமின் டாங்கின் நட வடிக்கைகளில் போரோடினும் கலங்து கொண்டு, இடைவிடாமல் ஆலோசனை கூறி வந்தார். ஸன் ணுடைய ளான்-மின்-ஜூயி தத்துவங்களை முறையாக நிறைவேற்றுவதே சீன முதலில் செய்ய வேண்டிய வேலே என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அவர் வருகையால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலிமை அதிகரித்ததோடு, தேசிய உணர்ச்சியும் பெருகி வந்து, கோமின்டாங் நாள்தோறும் ஆற்றல் மிகுந்து விளங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சீனவில் 1931-இல் ஏற்பட் டிருந்தது. சிறு கட்சியாக இருந்தாலும், அதனுடைய ஊக்கத்தில்ை, குடியானவர்களிடையிலும் தொழிலா ளர்களிடையிலும் மிகுந்த பிரசாரம் கடந்தது. ஆங்காங்கே ஸ்தாபனங்கள் எழுந்தன. கட்டுப்பாடும், அரசியல் எழுச்சியும் அதிகரித்தன. 1924-ஆம் u ஜனவரியில் கம்யூனிஸ்டுகளும் கோமின்டாங்கில் சேரலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அது முதல் ஏராளமான கம்யூனிஸ்டுகள் கோமின டாங் கில் சேர்ந்து ஊழியம் புரிந்து வந்தனர். கட்சி அதிகாரிகளுக்கு எல்லா அங்கத்தினரும் கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று உறுதி மொழி வாங்கப்பட்டது. பின்னல் இடையிடையே கம்யூனிஸ்டுகளுக்கும் கோமின்டாங்கின் மற்ற அங்கத்தினர் களுக்கும் சச்சரவு ஏற்பட்டு வங்த போதிலும், ஆரம்பத்தில் கோமின்டாங் புத்துயிர் பெற்றுப் புது முறையில் உழைப்பதற்குக் கம்யூனிஸ்டுகளின் கூட்டுறவு மிக்க உதவியாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ரஷ்யாவிலிருந்து திரும்பி வங்த பிறகு சியாங் ராணுவச் சீர்திருத்தத்தில் கருத்து வைத்தார்.