பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 சியாங் கே-வேடிக் கான்டனைத் தாக்கிப் பிடித்துக்கொண்டன. 1923, ஜனவரி மாதத்தில் குவாங்டுங் மாகாணத்தில் பெரும் பகுதி கோமின் டாங் ஆட்சிக்குள் வந்துவிட்டது. டாக்டர் ஸன் கான்டனுக்குத் திரும்பி வங்து மீண்டும் அரசாங்கத்தை அமைத்தார். இது முதல் ரஷ்யாவின் ஸோவியத் அரசாங்கத் திற்கும் டாக்டர் ஸ்ன்னுடைய புரட்சி அரசாங்கத் திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ரஷ்யாவிட மிருந்து பல உதவிகளையும் ஏற்றுக்கொள்ள ஸன் தயங்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் சியாங் கேஷேக்கை அவர் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தார். ஸோவியத் முறைகளை நேரில் பார்த்துப் பரிசீலனே செய்துவர வேண்டும் என்பதே அவர் கோக்கம். லெனின், டி. ராட்ஸ்கி, ரஷ்ய வெளிநாட்டு மங்திரி சிசெரின் ஆகியோருக்கு ஸன் சியாங்கை அறிமுகம் செய்து கடிதங்கள் எழுதிக் கொடுத்திருந்தார். அச்சமயம் லெனின் நோயுற்றிருந்ததால், சியாங் மற்றத் தலைவர்களேயே பார்கக முடிந்தது. அவர் நான்கு மாதம் ரஷ்யாவில் தங்கியிருந்தார். ஸோவியத் முறைகளில் பலவற்றைச் சீனுவிலும் அப லுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் விரிவாகத் திட்டங்கள் தயாரித்துக் கொண்டு திரும்பி வங்தார். 1934-இல் ஸோவியத்தின் முதல் ஸ்தானிகராகக் காரகான் என்பவர் சீனவுக்கு வங்து சேர்ந்தார். ஸோவியத் சீனாவைச் சம அந்தஸ்துடன் நடத்தி வங்தது. அதல்ை சீனவுக்கு உதவியைத் தவிர வேறு. திங்கு ஒன்றும் ஏற்படாது என்ற கிலேமை உண்டா யிற்று. சீனாவின் புனருத்தாரணத்திற்காக ஆலோ சனைகள் பெறுவதற்கு டாக்டர் ஸன் ரஷ்யாவி லிருந்து போரோடின் என்ற நிபுணரையும் வர வமுைத்தார். போரோடின் மிகுந்த திறமையுள்ளவர். அமெரிக்கா, துருக்கி முதலிய தேசங்களில் அவர்