பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சியாங் கே-வேடிக் புரட்சிப் போராட்டங்களில் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் பயிற்சி பெற்ற தளகர்த்தர்கள் இல்லாமை என்பதை அவர் அறிந்திருந்தார். பழைய தளகர்த்தர்கள் சுயநலத்தினர், கொள்கையற்றவர்கள்; அவர்களுக்கும் தேசபக்தி கட்டுப்பாடு முதலியவை களுக்கும் சம்பங்கம் இல்லை. ஆதலால் உடற்பயிற்சி போர்முறைப் பயிற்சிகளோடு, உள்ளப் பயிற்சியும் சேர்ந்து நட்ை பெற வேண்டும் என்று சியாங் தீர்மா னித்தார். தனிப்பட்ட அதிகாரிகளுக்கு விசுவாசமாக இருப்பதை விட்டு, தேச விடுதலைக்காக உழைத்து வந்த கோமின்டாங் ஒன்றுக்கே விசுவாசம் காட்ட வேண்டும் என்று தளகர்த்தர்களுக்கு உபதேசம் செய்ய விரும்பினர். கோமின்டாங்கின் அடிப்படைத் தத்துவங்களான தேசியம், ஜனகாயகம், ஜனங்களின் ஜீவனுேபாயம் ஆகியவைகளை அவர்கள் தெரிங்து கொண்டு திரிகரண சுத்தியாக அவைகளுக்காக உழைக்கவேண்டும் என்று அவர் கருதிர்ை. இவை களே எல்லாம் நிறைவேற்றுவதற்காக வாம்போவா என்ற இடத்தில் ஒரு ராணுவக் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது. 'வாம்போவா ராணுவக் கலா சாலை’ என்று அதற்குப் பெயர். 1934-ஆம் u ஜூன் 16-வட டாக்டர் ஸன் நேரில் சென்று அதைத் திறந்து வைத்தார். சியாங் அதன் தலைவராக நியமிக்கப் பெற்ருர். முதலில் 300 பேர்களை மட்டும் சேர்ப்பதற்குத் தீர்மானித்திருந்தார்கள். ஆனல் 3,000 மனுக்கள் வங்தன. இவைகளைப் பரிசீலனை செய்து, முதலில் 500 பேர்களுக்கு மட்டும் பயிற்சி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கலா சாலையின் வேலை முறை ரஷ்யாவில் செஞ்சேனைக்காக டிராட்ஸ்கி வகுத்திருந்த முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. காலாசாலே ஆரம்பிக்கப்பட்டதில் டாக்டர் ஸ்ன்னுடைய பெருமை அதிகரித்தது: அதைத் திறமையுடன் கடத்திவங்ததில் சியாங்கும்