பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிறைப்பட்டார்! 207 3. ஷாங்காயில் கைதி செய்த தேசீயத் தக்லவர்களை உடனே விடுதலே செய்ய வேண்டும். 4. தேசம் முழுவதிலுமுள்ள அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுதலே செய்யவேண்டும். مســحT 5. ஜனங்களின் தேசிய இயக்கத்தை வளர்க்க s வேண்டும். 6. பொதுக் கூட்டம் கூட்டும் உரிமையை ஜனங்களுக்குப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும். 7. டாக்டர் லென் யாட்-லென்னின் மரண சாஸனம் அப்படியே கிறைவேற்றப்பட வேண்டும். 8. தேசிய விடுதலை மகாநாடு ஒன்றை உடனே - கூட்டவேண்டும்.' * . இவ்வாறு எட்டுப் பிரிவுகளுடைய திட்டத்தை அனுப்பியதுடன், மேற்கொண்டு தாம் நிர்வாகக் கமிட்டியின் உத்தரவை எதிர்பார்த் திருப்பதாகவும் சாங் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையையும், பின்னல் அனுப்பிய செய்திகளையும் நான்கிங் சர்க்கார் வாங்கி வைத்துக்கொண்டு, கிணற்றுள் கல் போட்டது போல், மெளனமாக இருந்துவிட்டது. தேசத்தின் தலைமையான இனிய உயிர் பணயமாக இருந்ததைக் கருதி அவசரமான நடவடிக்கை ஏதாவது எடுக்கவேண்டுமே என்ற சிந்தனேயே அதற்கு இல்லாமற் போய்விட்டது. அதன் கருத் தெல்லாம் வேறு விதமாகத் திரும்பியிருந்தது. சேனுபதியின் ஆலோசனையாளர்களில் டோனல்ட் என்ற ஆஸ்திரேலியர் ஒருவர். அவர் இரண்டு தினங்களுக்குப் பின் ஸியான் வந்து சேர்ந்தார்.