பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சியாங் கே-வேடிக் ரஷ்யாவும் மஞ்சூரியாவில் விசேஷ உரிமைகள் பெற்றது. உலேந்து உதிரும் தருணத்திலிருந்த சீன அரசாங்கத்திற்குத் தலைமை வகித்திருந்த சக்கரவர்த்தி வந்தவர்க்கெல்லாம் உரிமை வழங்கும் வள்ளலாக விளங்கினர் ! 19-ஆம் நூற்ருண்டின் இறுதியில் சீன சாம்ராஜ்யம் உருக்குலேங்து கின்றது. வெளி நாட்டார்களுக்கு விசேஷ உரிமைகள் கொடுத்ததால் சீனவுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனந்தம், வெளி நாட்டார் சீனர்களைப் பலவங்தமாகப் பிடித்துக் கப்பல்களில் ஏற்றி, மேற்கு இந்தியத் தீவுகளுக்கும், அமெரிக்க ஐக்கிய மாகாணத்திற்கும் தொழிலாளராக அனுப்புவது சாதாரணமாக நடந்து வந்தது. அதாவது, சீனப் பெருள்களோடு சீனர் உடல்களும் வாணிபப் பொருள்களாயின. அங்கியர் களுக்கு எதிராகச் சீனர்கள் சிறு கலகம் செய்து விட்டாலும் அதற்கு நஷ்ட ஈடாக அதிகத் துறை முகங்களும், அதிக உரிமைகளும் வெளியார்களுக்குக் கிடைத்து வங்தன. கப்பல் கப்பலாகச் சீனர்களைக் கூலிகளாகப் பிடித்து அனுப்புதலும் உடனே கடை பெற்றது. 1857-ல் இரண்டாவது அபினி யுத்தம் நடந்தது. பிரிட்டிஷார் கான்டனே ப் பிடித்துக் கொண்டனர். மூன்று வருஷங்களுக்குப் பின் பிரிட்டிஷ் பிரெஞ்சுத் துருப்புகள் பெகிங் நகரைப் பிடித்துக் கொண்டன. அந்நகரின் புராதன அரண் மனையைச் சூறையிடும்படி பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஏவப்பட்டனர். ஏராளமான செல்வங்கள் கொள்ளே யிடப்பட்டன. இதன் பலனுகவும் மேற்கொண்டு உடன்படிக்கைகள் ஏற்பட்டன. ரஷ்யா அமெரிக் காவைப் போலவே ஜெர்மனியும் சம உரிமைகளைப் பெற்றது. 1861-ல் கிங்டோ என்ற இடமும், அதைப்

  • பெகிங் என்பது பெய்ப்பிங் நகரின் பழைய பெயர்.