பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் 43 பின்பற்றி வேறிடங்களும் சீன ஆட்சியை விட்டு அங்கியர்க்கே உரிமையாகப் போய்விட்டன) அபினி யுத்தங்களாலும் நியாயமற்ற உடன் படிக்கைகளாலும் சீனுவின் இடுப்பு முறிந்து போய் விட்டது. அங்கியர்களுக்கு அபராதத் தொகைகள் (கஷ்ட ஈடுகள்) கட்டுவதற்குக்கூட அரசாங்க வருமானம் காணவில்லை. சுங்கவரி வசூல் உரிமையும் வெளி நாட்டார் ஆதிக்கத்திற்குப் போய்விட்டது. அதிக வரிகளால் ஜனங்கள் அலறிக்கொண்டிருந்தனர். ஜனங்கள் தமக்கு எதிராகக் கிளம்பிவிடக் கூடாதே என்று தம்முடைய பிர்ஜைகளை அடக்குவதற்கே சக்கரவர்த்தி வெளிநாட்டார் உதவியை நாடவேண்டி யிருந்தது. அரசாங்க உத்தியோகங்கள் பணத்திற்கு ஏலம் போடப் பட்டன. வெளி நாட்டாரிடம் ஏராளமான கடன்கள் வாங்கப்பட்டு, விஷம் ஏறுவது போல் அவைகளுக்கு வட்டி ஏறிக்கொண்டிருந்தது. பஞ்சமும், நோயும், வெள்ளமும் நாட்டைப் பீடிக்க ஆரம்பித்தன. 1877-8இல் மாரிக் காலத்தில் ஷென்ஸி மாகாணத்தில் மட்டும் ஐம்பது லட்சம் ஜனங்கள் மடிந்து போயினர். விவசாய வசதிகள் பல வருஷங்க ளாகக் கவனிக்கப் படாமல் பாழடைந்து போயின. இவ்வளவுக்கும் இடையில், ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ் முதலிய தேசங்களில் ஒன்று மாற்றி ஒன்று சீேைவாடு பொருது கொண்டே யிருங்தது. 1900-இல் சீன 5,45,00,000-பவுன் கடனுகக் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தத் தொகை முக்கியமாக ஆங்கில ஜெர்மன் பாங்கிகளுக்கே செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு வருஷங் தோறும் முப்பது லட்சம் பவுன் வட்டி முதலிய செலவுகளுக்காகக் கொடுக்க வேண்டியிருந்தது. சர்க்கார் வருமானம் ஒரு கோடிப் பவுன்; கட்ட வேண்டிய வட்டி முப்பது லட்சம் பவுன்! பின்னல் வருமானத்தில் சுமார் பாதியையே வட்டியாகவும்