பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சியாங் கே-ஷேக் திட்டாலும், பின்னல் உறுதி செய்யாமல் இருந்து விட்டது. எல்லா வல்லரசுகளும், சீனவின் சுதங் திரத்தையும், அது தன்னைத் தானே ஆண்டுகொள்ளும் உரிமையையும் மதித்து நடக்கவேண்டும் என்றும், சீனவில் வர்த்தகம் செய்ய அந்த நாடுகள் எல்லா வற்றிற்கும் சம உரிமை உண்டு என்றும் சீன பூமியில் எங்த நாடும் எங்கும் தனக்கென்று விசேஷ ஆதிக்கம் செலுத்தக்கூடிய இடத்தை அமைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் இந்த உடன் படிக்கையால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஜப்பான், உடன்படிக்கை காடுகளில் ஒன்ருயிருந்த போதிலும், சமயோசிதம் போல் அதைப் புறக்கணித்து வந்தது. 1981-இல் அது சீன வின்மேல் படையெடுத்ததும், பின் 1937-இல் மீண்டும் போர் தொடுத்ததும், சீனவை மட்டும் தாக்கியதல்ல, மற்ற எட்டு வல்லரசுகளையும் உதறித் தள்ளியதாகும். ஆனல் வல்லரசுகள் எல்லாம், தங்களை ஜப்பான் கேரில் தாக்க ஆரம்பிக்கிற வரையில், பேசாதிருந்து விட்டன. சர்வ தேச சங்கம் கூடச் சீவுைக்கு அணுவளவுகூட உதவி செய்ய முடியாமற் போய்விட்டது. எல்லாம் மறைமுக மாகச் சீவுைக்கு நன்மையாகவே முடிந்தன. ஏனெனில், இந்தத் துரோகங்களாலும், அவமானங் களாலுமே, சீன 'தன் கையே தனக்கு உதவி என்ற தத்துவத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது. வெளி நாடுகள் சீனவோடு வர்த்தகம் செய்து வங்த முறை சீனவின் கழுத்தில் கயிறுகளை மாட்டிச் சுருக்கிட்ட கதையேயாகும். இவைகளில் கடைசியில் ஜப்பான் மட்டுமே தனிப் பகை நாடாக முன் வந்தது. ஜப்பான் அளவில் மிகச் சிறிய நாடாக இருந்த போதிலும், உலகப் போராட்டத்தில் அது மிக முக்கியமான ஸ்தானம் வகிக்கிறது. உண்மையில் இரண்டாவது உலக யுத்தத்தை ஆரம்பித்து வைத்ததே ஜப்பான்தான், ஜெர்மனி அன்று