பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 41


சீமை பற்றி கம்பெனி தலைமையிடத்திலும், நவாப்பிடமும் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். அத்துடன் திருநெல்வேலிப் படையெடுப்பிற்கு உதவுமாறு மறவர் சீமை மன்னர்களைக் கேட்டுக் கொண்டார்.

அடுத்த சில நாட்களில், சிவகங்கை, இராமநாதபுரம் மறவர்களைக் கொண்ட படைகள் சேதுபதி மன்னரது சகோதரர் சுப்பராயத் தேவரது தலைமையில் திருநெல்வேலி புறப்பட்டது.[1] ஆங்கிலேயரது சேவைக்கென்றே தங்களை அர்ப்பணித்திருந்த புதுக்கோட்டை தொண்டமானும், தஞ்சை மன்னரும் மறவர்களுடன் கிழக்கிந்தியக் கம்பெனியார் தொடர்பு வைத்துக் கொள்வதை வெறுத்ததுடன் அந்த கூட்டணியில் இருந்து விலகி, தளபதி மயானாவை திருச்சிராப்பள்ளியின் நவாப்பாக அங்கீகரித்துச் செயல்படப் போவதான எதிர்ப்பைக் கூறி மிரட்டினர். இந்த எதிர்பாராத சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக திருநெல்வேலி நகருக்கு ஐந்து கல் தொலைவில் வந்துவிட்ட மறவர் அணியைத் திரும்பிச் செல்லுமாறு தளபதி ஹெரான் உத்திரவிட்டார்.[2]

அப்பொழுது, சென்னைக் கோட்டையின் கும்பெனியாரது புதிய கவர்னராகப் பதவி ஏற்ற பிகாட் என்பவர் தளபதி ஹெரானது செயல்பாட்டிற்கு ஏற்புடையவராக இல்லை. புதிய கவர்னர் அரசியல் கொள்கையில் மாற்றம் செய்ய விரும்பாமல், சிவகங்கை, இராமநாதபுரம் மன்னர்கள், தஞ்சை மன்னருக்கு ஆதரவாகத் தங்களது அனுமந்தக்குடி மாகாண உரிமையை விட்டுக் கொடுத்து ஒத்து போகுமாறு அறிவுறுத்தினார்.[3] ஒரு புதுமையான ஆனால் சற்றும் எதிர்பாராத நியாயத் தீர்ப்பாகத் தோன்றியது, மறவர் சீமை மன்னர்களுக்கு. என்றாலும் மீமாம்சை போன்ற நூல்களில் கலியுகம் மதிக்கத்தக்கதாக காட்டப்பட்டுள்ள பல்வேறு வகையான நியாயங்களில் "தைமிக்க நியாய" வகையிலான நியாயம் இது என்பதை உணர்ந்து ஆறுதலடைந்தனர்.

என்றாலும், தங்களது தற்காப்பிற்கு உதவக் கூடிய வெளிநாட்டு சக்தி ஒன்றின் ஆதரவு இன்றியமையாதது என்ற நிலையை உணர்ந்தனர். அப்பொழுது, ஆங்கில, பிரஞ்சு நாட்டவர்களைப் போல, டச்சுக்காரர்கள் கைத்தறித் துணி, மிளகு, இலவங்கம், பாக்கு முத்து, நெல் ஆகிய பொருள் கொள்முதல் ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். ஹாலந்து நாட்டவரான டச்சுக் கம்பெனியார் தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, மாலத்தீவு, போர்னியோ, ஆகிய கீழை நாடுகளிலும் வாணிபத்


  1. Raja Rama Rao - Manual of Rammad Samasthanam (1891) P: 242
  2. Ibid. - P. 243
  3. Military Consultations - Vol.4/24.4, 1755. P. 72-74