பக்கம்:சுமைதாங்கி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- # * t ، له خانه ه ه خاصی நாளுக்கு நாள்மாறும் காட்டுக் கூத்தில்

நமக்கென்ன பாத்திரமோ? அறியோம் நாமே! ஆளுக்கும் வாளுக்கும் அஞ்சி வாழ்ந்தோம்;

அரசியலில் யாருக்கும் பயந்து போனல் தோளுக்குச் சரியாக வளரா தாரும்

துடுக்குடனே கமையடக்கத் துடித்து நிற்பார்! கோளுக்குக் கலம்செலுத்தும் நாளில், இங்கே கும்பிட்டுக் கைகட்டி வாழ்தல் ஏனே?

தத்துவமாய்ச் சிந்தித்த பெரியார் சொத்தைத்

தமக்குற்ற நுண்ணறிவின் திறனுல் அண்ணு

புத்தகமாய் விரித்துரைத்தார் கற்ருர், கல்லார்

புதுக்கருத்தைப் புரிந்துகொள்ள ஆசான் ஆனுர்!

வித்தகராய் வினையாற்றி, முடிக்கும் ஆற்றல்

விளைநிலமாய்க், களத்திறங்கி எதற்கும் என்றும்

- சித்தமாகிச், செயல்படுத்தும் தொண்ட ராகச்,

100

சிறுவயதுப் பெரியாராய்ப் பலபேர் உள்ளார்!

தவருகத் திரித்துரைத்து, காத்தி கத்தார்,

தமிழகத்தைப் பிரித்திடுவார் என்று கூவி

எவரெவரோ கச்சைகட்டி அழிக்கப் பார்த்தார்;

இயலாது தோல்விகளை ஒப்புக் கொண்டார். அவரவரும் இன்றுநெஞ்சில் உணர்ந்த தாலே * , : :

'அய்யாவின் செயலால்தான் மேம்பா டுற்ருேம்; சுவரிருந்தால் தானேகம் சுகவாழ்வு!’ என்றே ,

சொல்கின்ருர்; அதுகமக்குப் போதும் அய்யா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/109&oldid=692186" இலிருந்து மீள்விக்கப்பட்டது