பக்கம்:சுமைதாங்கி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமை

மெய்ம்மையேபோற்றிவாழும் மேன்மையாந்தமிழர்நாட்டில் கைம்முதல் கல்வி யின்றிக் கவிதைகள் எழுதப் போந்தோர் பொய்ம்மையின் எல்லையாகப் புராணமே செய்தார்! இன்ருே செய்ம் முறை நன்க றிந்து சீர்திருத் தங்கள் செய்து

பாட்டினிற் புதுமை கண்டான் பாரதி தாசன் என்பான்! காட்டினில் மக்கள் துன்பம் கலிவுகள் வறுமை சூழ்ச்சி ஏட்டினில் விரித்து ரைக்கும் ஏழையின் தோழன் செம்மை காட்டிட என்னல் ஆமோ? கண்ணுளோர் காணல்வேண்டும்!

உவமையிற் புதுமை என்ன உளந்தொடும் உணர்ச்சிஎன்ன நவயுகக் கருத்தைக் கூறும் கடையினில் எளிமை என்ன கவலையைத் தீர்க்கும் இன்பக் கவிநயம் நகைப்பும் என்னஅவனையிக் காட்டார் முற்றும் அறிந்திடவில்லை இன்னும்!

கல்வியின் உயர்வுசொல்வான் காதலின்பெருமைசொல்வான் கல்வினைக் குடும்பம் ஆற்றும் நடைமுறை நயந்துசொல்வான் பல்சுவை விரவி நிற்கும் பழந்தமிழ் வலிமை சொல்வான் அல்வழி யால்நுழைந்த அயன்மொழித் தீங்கும் சொல்வான்!

செந்தமிழ் கடையை நல்ல தீர்ப்புமே தெளிவாய்க் காட்டும் சுந்தர இயற்கை மாண்பை அழகின்சிரிப்புச் சொல்லும் விந்தையாய் இல்ல றத்தைக் குடும்பவி ளக்கு வீசும் அந்தமாய் இருண்ட விடும் அறிவிலார் வாழ்வைப் பேசும்!

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/112&oldid=692189" இலிருந்து மீள்விக்கப்பட்டது