பக்கம்:சுமைதாங்கி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு

செக்கிழுத்தார்; சிறைசென்ருர், தியாகம் செய்தார்; சிங்கமெனும் ஆங்கிலேயர் பிடரி தன்னைச் சிக்கெனவே பிடித்தாட்டும் விதமாய்ப் போட்டிச்

சிறுகப்பல் கடல்துாத்துக் குடியில் விட்டார்; தெக்கணத்துத் திலகரெனப் புகழும் பெற்றுத்

தேசியமாம் கனல்எரிய விறகாய் ஆளுர்; தக்கவர்க்குத் தக்கவாறு நினைவுச் சின்னம்

தமிழரசு சமைத்தநாளே திருநாள் அன்ருே?

அரசியலில் தம்மைத்தாம் அழித்துக் கொள்ளும்

அகிம்சையெனும் அறவழியில் பலபேர் சென்ருர்; வரிசைபெறுஞ் சிதம்பரனர் துய்த்த வண்ணம்

வகையான முழுவாழ்வு வாழ்ந்தோர் யாரே? சிறைசென்று மீண்டவர்கள் பல்லோ ருள்ளும்

செக்கிழுத்துச் சிதைவுற்றேர் இவர்போல் உண்டா? கரிசனமாய்ச் சுதேசியத்தைக் காப்போம் என்போர்

கப்பலினைச் செலுத்துதற்குத் துணிவா பெற்ருர்?

இல்லறத்தில் ஈடுபட்டு வலிமை சேர்த்தோர்

எழில்மனைவி தனக்கொருநூல் இயற்றி னரா? வல்லவராம் இவர் தந்த வள்ளி யம்மை -

வரலாறும் உரைநூலும் அரிய செல்வம்! எல்லையிலா மொழிப்பற்றுக் கொண்ட தாலே .

எத்தனைநூல் முதன்முதலாய்ப் பதிப்பித் துள்ளார்: கல்லவர்கள் இருந்தாரே இவர்போல் உற்ற

நண்பர்தம் வறுமையிலும் நீங்கார் யாரே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/114&oldid=692191" இலிருந்து மீள்விக்கப்பட்டது