பக்கம்:சுமைதாங்கி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முச்சந்தி, நாற்சந்தி, மூலை எங்கும்

முறுக்கோடே இருக்கின்றேன்; ஆனல் பாழும் பச்சோந்தி களைப்போல்.ஊர் சிரிப்பதில்லை! பட்டணமா? பாங்கான பட்டிக் காடா? அச்சந்தான் உண்டாமோ? கையைக் காட்டி

அறிமுகத்தைச் செய்கின்றேன்; இதனுல் என்ன மிச்சந்தான் எனக்கென்ருல் விளம்பு கின்றேன்:

விளம்பரத்தை விரும்பாத விளம்ப ரம்கான்.

கைகாட்டி நிற்கின்றேன்; யார்முன் னும்போய்க்

கைகட்டி நிற்பதில்லை; மானம் உள்ளோன்! கைநீட்டிப் பழக்கந்தான்; கேட்ட துண்டா?

கருப்பென்பார் வெளுப்பென்பார் இசைந்த, துண்டா? கையாட்டி விளையாடும் சிறுவர் வீணுய்க்

கால்கட்டி ஏறுகின்ருர் என்மேல்; நீங்கள் கையோட்டி நடக்கின்றிர் கவனிக் காமல்;

கண்காட்டி மயக்கினேனு நான்சொல் லுங்கள்?

தனிமனிதன் காட்டுகின்ற தத்து வங்கள்

தலைகீழாய் மாறிடலாம்; ஆனுல் தன்னக் தனிமரம்கான்; தைரியமாய் எனகம் புங்கள்; சரியான இடம்போவீர் தடுமா ருமல்! தனிமனிதன் வாழ்வுக்கா ஒற்றைக் காலில்

தவமிருந்து வருகின்றேன்? சிந்தி யுங்கள்! பனிமலையைப் பார்க்கத்தான் முடியும்; என்றன் பணிமிகவும் பெரிததற்கு வையம் சாட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/29&oldid=692106" இலிருந்து மீள்விக்கப்பட்டது