பக்கம்:சுமைதாங்கி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.

கிளுகிளுப்பை உள்ளத்தில் மூட்டும் இல்லக்

கிழத்திக்கு வளைகாப்பை முடித்த பின்னர்... கிலுகிலுப்பை வெள்ளியினுல் வாங்கு தற்குக்

கிடைக்கின்ற பணத்தையெல்லாம் சேர்த்து வைத்தான். சிலுசிலுப்பைத் தருங்குழந்தை பிறக்கு முன்னர்

திடீரென்று உடல்நலிந்தாள் மருந்து வாங்கும் அலுவலுக்குச் செலவழிக்க மறுத்தான் முட்டாள்!

அவனறிவு மொட்டையென மனைவி செத்தாள்!

കോങ്ങിൽ தவருகக் கருது கின்ருர்;

குற்றந்தான் மதுவிலக்குக் கொள்கை மீறல்!

கோப்பையிலே தேரீரும் குடிக்க லாமே

குறையெல்லாம் பருகுவதைப் பொறுத்துத் தானே? கேப்பையிலே கெய்வடியும் என்று சொன்னல்...

கேட்பவர்க்குப் புத்தியெங்கே போயிற் றென்பர்! ஏய்ப்பையெலாம் கம்பாதிர் அறிஞர் கூறும்

எச்சரிப்பைப் பொருட்படுத்தி வாழ்வீர் கன்ருய்!

தொப்'பென்று கண்டவற்றை உள்ளே போடத்

தொங்கிப்பை பெருத்ததனுல் தொப்பை என்ருர் . குப்பைகளைப் போடுகின்ற தொட்டி அல்ல!

குந்தியே தின்றழிக்கத் தொந்தி வேண்டாம். துப்புரவாய்த் தும்பைப்பூ நிறத்தி லுள்ள

தூயவெள்ளைக் காகிதத்தில் கறுப்பைப் பூசி எப்பொழுதும் தருகின்றேன்; முறிப்பீர் நட்பை:

என்பையிற் பேணுவின் இழப்பை வேண்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/37&oldid=692114" இலிருந்து மீள்விக்கப்பட்டது