பக்கம்:சுமைதாங்கி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமாவோ மாவுத்தன், யானைப் பாகன்;

மருமானுே மாலுமியாம், கடல்மேல் செல்வோன்! 'சாமான்யன் ஆலுைம் தரைமேல் வாழ்ந்தால்

சமாதானங் கொண்டுகானும் தருவேன் பெண்ணே! கோமானும் எனக்குப்பின் அம்பா ரிக்குள்

குடைநிழலில் சமானமாக அமர்ந்தி ருப்பார்! சீமானுே பூமானே இலையென் ருலும்

செம்மாப்புக் குறைவில்லை எனக் கென் ருனே!

அம்மானை ஆடுகின்ருர் மாளி கைவாழ்

ஆரணங்கு சோலையிலே இன்பம் மாந்தி, சும்மாடு தலைமீது; சுமையைத் துரக்கிச்

சுமாராக வாழ்கின்ருர் உழைக்கும் பெண்டிர். சிம்மாச னத்தினிலே வீற்றி ருந்தோர்

செரிமானம் ஆய்விட்டார்; மறைந்தே போனுர்! பெம்மானே பெருமானே என்று பாடிப் -

பிரமாத மாய்ப்புகழக் கவிகள் இல்லை.

அரிமாவின் கோக்கென்பார்; கடக்கும் பாதை

அனுமானம் மிகத்தேவை ஏமாற் றத்தைப் பரிமாறு வோர் மாசு பரிமா னத்தால்

பலமாகும்; இமாலயமாய் உயர்ந்து கிற்கும்! பொரிமாவில் ஆசையுற்ற பொக்கை வாயன்

பொய்மான்மேல் ஆசையுற்ற சீைத போல! சரி, 'மா'வில் இனியொன்றும் கிடைக்க வில்லை.

சன்மானம் விமானத்தில் வருமா? பார்ப்போம்!

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/39&oldid=692116" இலிருந்து மீள்விக்கப்பட்டது