பக்கம்:சுமைதாங்கி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மை

பொறுமையிலே மிகச்சிறிய மாற்றஞ் செய்தால்

பொருமையாக உருவெடுத்தல் எழுத்தின் மேன்மை! வறுமையிலும் செம்மையென்ருர், தேவை தானே? வளமையிலே வள்ளன்மை வியப்பா காது. சிறுமைக்கும் பெருமைக்கும் உரிமை, தத்தம்

செய்கைதான் என்றமைதல் உணர்தல் நன்ரும். மறுமைக்கு வேண்டியவை இம்மை ஆற்ற

மகிமையுள்ள மதவாதி தொடர்ந்து ரைப்பார்!

உண்மைக்குப் பகைமையாகும் பொய்ம்மை; என்றும்

ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும் ஒருமை சேய்மை! பெண்மைக்கும் ஆண்மைக்கும் முறைமை.தாழ்மை

பேசாமை; ஏசாமை, இணையுந் தன்மை! கண்மையைக் கருமைக்கும் உவமை காண்போம்

கயமையுள்ளார் நிலைமைக்கும் தகைமை சொல்வோம்! வெண்மையுள்ளம் வெகுளாமை தங்கும் கூடம்!

வேளாண்மை மேலாண்மைத் தொழிலாம், வாய்மை!

கன்மைக்குத் தின்மையெனில் அச்சந் தோன்றும்!

நாணமிலார்க் குடைமையென்ன? உடையில் லாமை! புன்மைதான் அறியாமை விளையும் பூமி,

புதல்வரது படியாமை புகழைக் கொல்லும்! மென்மையெனில் மங்கைக்கும் மலர்க்கும் தாய்மை; மெய்ம்மையறி யாமூர்க்கர் உணரார் நுண்மை. வன்மையில்லா வீரமுமே வெறுமை; ஏழ்மை,

வளையாமை தலைமைக்குச் சிறப்புக் கேண்மை!

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/40&oldid=692117" இலிருந்து மீள்விக்கப்பட்டது