பக்கம்:சுமைதாங்கி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணக்கம்

நான் தஞ்சாவூர்க்காரன். கல்லணை கட்டிக் காவிரிக்குக் கரை யெடுத்த கரிகாற்பெருவளத்தான் எனுந் திருமாவளவனல் அகழப் பெற்ற வெண்ணியாற்றின் தென்கரை மீதுள்ள, தஞ்சை நகராட்சி எல்லைக்குட்பட்ட, சுங்கந்தவிர்த்தசோழன் திடல் நான் பிறந்த இடம். 15-10-1925-ல் பிறந்த நான், தமிழவேள் உமாமகேசனர் நிறுவிய கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை வடக்கு வீதியிலுள்ள தொன்மை வாய்ந்த தூய பேதுரு உயர்நிலைப்பள்ளி, கும்பகோணத்தில் பொன்னியாற்று மருங்கில் அமைந்திருக்கும் புகழ் மேவிய அரசினர் கல்லூரி ஆகிய கல்விக் கூடங்களில் பயின்றேன்.

தமிழாசிரியராகித் தமிழ்த்தொண்டு புரியவேண்டும் எனப் பெரிதும் விரும்பி, இளமையிலேயே தமிழிலுள்ள இலக்கண இலக்கியங்கள் அனைத்தையும் கற்றேன். ஆனல் அரசு அதிகாரி யான என் தந்தையார்க்கு நான் தமிழாசிரியராவதில் விருப்ப மில்லை. கதை, கட்டுரைகள் எழுதித் தமிழ்ப் பணியாற்றிட எண்ணித் துவங்கினேன். எனினும், கருத்துக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கிடக் கவிதையே நல்ல கருவி எனக் கருதிப் பின்னர், செய்யுள் யாத்தலையே விழைந்து, தொடர்ந்து எழுதி வரலானேன்,

நான் இருமுறை பரிசுபெற்ற அரசு ஊழியர். ஆமாம்! மத்திய அரசில் பணியாற்றும்போது ஒருமுறையும், மாநில அரசில் அலுவல ராக இருந்தபோது இன்னெருமுறையும் பரிசு பெற்றவன். எப்படி?

1946-ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே மத்திய அரசின் தபால் தந்தித்துறையில் அஞ்சற்பிரிப்பாளர் என்னும் மூன்ரும் பிரிவு ஊழியராகச் சேர்ந்தேன். தொழிற்சங்க ஈடுபாட்டினல், கிளைச் சங்கத் துணைச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி, இறுதியில் மாநிலச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினேன். தஞ்சை, ஈரோடு, மாயூரம் ஆகிய ஊர்களில் பணியாற்றி வந்தேன். 1960-ஆம் ஆண்டில் அனைத்திந்திய ஊழியர்களின் வேல்ை நிறுத்தம் நடைபெற்றபோது, நான்தான் வேலை நிறுத்தத்தைத் தூண்டி யவன் என்று கருதப்பட்டுப் பரிசு வழங்கப்பெற்றேன்.

என்ன பரிசு? இரண்டு நாள் சிறைவாசம், நீதி மன்றத்தில் வழக்கு; வேலை நீக்கம்! நான்கு திங்களுக்குப் பின்னர் மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/4&oldid=692081" இலிருந்து மீள்விக்கப்பட்டது