பக்கம்:சுமைதாங்கி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானம்

'வானந்தா ய்ைப்பொழியும், குளிரும் பூமி:

வறட்சிமாறப் பயிர்செய்வான் நமது தோழன்! ஏனந்த வெள்ளையனுக்கு இறை செலுத்தி

இழிநிலையில் கம்மைநாம் ஆள வேண்டும்? மானந்தான் பெரிது நமக்கு உயிரோ துச்சம்!

மறத்தமிழர் குடிப்பெருமை புராணம் அல்ல! ஆனந்தம் அடிமைமண்ணில் இல்லை; என்றும்

அங்கியருக்கு இடங்கொடுத்தல் மடமை'என்றேன்.

வழக்கம்போல் உடன்பிறந்தான் உடன்தான் கின்ருன்!

வஞ்சகமாய் கரிவேலை செய்யும் ஈனன் - சழக்கருடன் சேர்ந்துகொண்டான்; சதிகள் செய்தான்! சண்டாளர், பிழைக்கவந்தோர், காட்டை ஆள உழக்களவும் உரிமையிலார் படிய ளந்தால்

உப்பிட்டுச் சோறுதின்போன் உணர்வு போமோ? கிழக்கையாள மேற்கிருந்து வந்த கூட்டம்

கிடுகிடுக்கப் போர்தொடுத்தேன்; எனைய ழித்தார்!

பூண்டற்றுப் போகட்டும் எனது வம்சம்

புகழற்றுப் போகட்டும் கம்கா டென்றே ஆண்டஅந்தப் பரங்கியர்கள் கனவு கண்டார்!

அடிமட்ட மாய் இடித்தார் கோட்டை யெல்லாம்! வேண்டுமென்றே உழுதுபோட்டார்; ஆம் ணக்கை

விதைத்திட்டார்! சுதந்திரத்தின் வேட்கை பின்னல் மூண்டெழுந்து வெள்ளேயரை வெளியே தள்ளி முழுவதுமே குடியரசாய் மலர்ந்த தன்ருே?

8 i சு.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/90&oldid=692167" இலிருந்து மீள்விக்கப்பட்டது