பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஏழை, நான் நீக்ரோ எதிர்த்து அடிக்க எனக்கு ஆயுதமில்லை. போலீஸ்காரனிடமிருந்து தப்பிவாழ ஆண்டவனை வேண்டு கின்றான். அபயக் குரலுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லை. ஆண்டவன் வரமாட்டான். ஏன்? ஆண்டவனும் ஒரு வெள்ளைநிறக் கடவுள்தானே? ஆண்டவனும் ஒரு சுரண்டும் முதலாளி என்ற எண்ணம் கவிஞனுக்குப் பிறக்கின்றது. பணம் படைத்தோருக்கே ஆண்டவன் உலகத்தைப் படைத்துள்ளான். ஆண்டவன் பாரபட்சமுள்ளவன் என்று ஆண்டவனையே கவிஞன் சாடுகின்றான். பசியால் கண்ணிர் வடித்து ஆண்டவனை வேண்டும் குழந்தையைப் பார்த்து ஆண்டவனே கூறுகின்றார். பசியோடிருக்கும் குழந்தையே உனக்காக இந்த உலகத்தை நான் படைக்கவில்லை. ரயில் ரோடு கம்பெனியில் நீ சேர் வாங்கவில்லை கார்பொரேஷனில் நீ முதலீடு செய்யவில்லை ஸ்டாண்டர்டு எண்ணெய்க் கம்பெனியில் உனது பங்கீட்டு மூலதனம் எங்கே? நான் உலகத்தைப் படைத்தது இன்றைய பணக்காரர்களுக்கும் நாளைய பணக்காரர்களுக்கும் உனக்காக அல்ல பசியால் வாடும் குழந்தையே! நீக்ரோ மக்களை துன்பத்திலிருந்து கிருத்துவினால் மீட்க இயலாது. கிறிஸ்துவ பாதிரிமார்கள் புளுகர்கள், பொய்யர்கள். கிறிஸ்துவ மதத்தின் கோட்பாடுகள் காற்றிலே பறக்கின்றன. ஏசு கிறிஸ்து மறுபடியும் மனிதனாக, நீக்ரோவாக இவ்வுலகில் பிறப்பா ரேயானால் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல சிறிதும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் இன்றைய கிறிஸ்தவர்கள். மறுபடியும் உலகில் நீக்ரோவாக ஏசு பிறப்பது நல்லதல்ல. அமெரிக்காவில் ஏராளமான தேவாலயங்கள் அங்கெல்லாம் ஏசுபிரான் பிரார்த்தனை செய்ய இயலாது. இறையுணர்வு மிக்க நீக்ரோக்கள் கூட - 14&