பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரி:- அது யாருங்க? பெரிய ஸ்பெஷலிஸ்டாடி கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்களேன்! டாக்டர்:- ஆமாம்..... பெரிய உருப்படிங்களுக்கு வைத்தியம் பாக்கற ஸ்பெஷலிஸ்ட் நான் இப்ப அவசரமா வார்டுக்குப் போயிக்கிட்டு இருக்கேன்.... ஒங்களோட பேச நேரம் இல்லே! . வியாபாரி:- போங்க! போங்க! எப்பிடியோ அந்த ஸ்பெஷலிஸ்ட் பாத்தாவது என் வயித்து வலி சரியானாச் சரி: (போகிறார். காட்சி முடிவு) காட்சி 3 (ஆஸ்பத்திரி டாக்டரிடம்கருப்பண்ணனும், சின்னானும் இளைஞர்களை அழைத்துக் கொண்டுவருகிறார்கள்) கருப்:- அய்யா நேத்துக் காலைலேருந்து என்பேரன் வயித்து வலி, வயித்து வலின்னு துடியாத் துடிக்கறான்யா! டாக்டர்:- ஆஸ்பத்திரிக்கிக் கொண்டு வந்துட்டே இல்லே! நாங்க பாத்துக்கறோம். மேலே இருக்கிற துணிய எடுய்யா? ஏப்பா குளிறா; மழைவேறே! ஒரு சட்டைகிட்டை போட்டுக்கிட்டு வந்திருக்கக் கூடாது? வெறும் ஒடம்போட கூட்டிக்கிட்டு வந்திருக்கே (சோதனை செய்கிறார்) ஆமா... என்ன சாப்பிட்டான்...? - g சின்னான்:- என்னத்தங்க சாப்பிடறது? சாப்பிட்டு மூணு நாளாச்சுங்க? - டாக்டர்:- ரொம்ப சீரியஸாத்தான் இருக்கு சாயந்தரம் என்னோட கிளினிக்குக்கு கூட்டிக்கிட்டு வரியா? (கருப்பண்ணன் சின்னானைப் பார்க்கிறான்) என்ன முழிக்கிறே! முடியாதா? சரி! அட்மிட் பண்ணணும்னு எழுதித்தரேன். கொண்டு போயி அட்மிட் பண்ணு வார்டுல வேற டாக்டர் வந்து பாப்பாரு கூட்டிக்கிட்டுப் போ! (காட்சி முடிகிறது) 46 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/47&oldid=463953" இலிருந்து மீள்விக்கப்பட்டது