பக்கம்:செவ்வானம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 99 'அரசியலில் கலந்து கொண்டால்தான் புகழ் அதிகம் வரும் அதைத்தொடர்ந்து பதவியும் வரும் திறமையும் வசதியும் இருந்தால் கிடைக்கக் கூடிய பெரிய பெயரையும் பதவியையும் வைத்துக் கொண்டு இஷ்டம்போல் பணம் பண்ணி விடுவதும் சாத்யமே என்று எண்ணினார் புன்னைவனம். அவர் எண்ணுவதெல்லாம் அற்புதக் கருத்துகளாகும் என்று ஆமோதிக்கத் தயங்காத சிவசைலம் முதலாளியின் இந்த நினைப்புக்கும் சபாஷ்போட்டு, ஆரவாரமாகக்கரகோஷம் செய்தார். 'புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கலாமா? அல்லது இருக்கிற கட்சி எதையாவது ஆதரித்து நாமும் ஆதரவு தேடிக்கொள்ளலாமா? என்று கேட்டார் அவர். 'புதுக் கட்சி எதற்கு? தெம்பில்லாமல் இருக்கிறது தனி உரிமைக் கட்சி. அதன் தலைவர் சுயம்பிரகாசம். அவரே தலைவர் தலைவர் தான் கட்சி என்ற முறையில் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் சில கட்சிகளில் அதுவும் ஒன்று. அவர் சுலபமாக உங்கள் தலைமையை யும் தலையீட்டையும் அங்கீகரித்து ஆனந்தமடைவார். அப்புறம் அவர் உதவியுடன் தீவிரப் பிரசாரங்கள். பிரசங்கத் திட்டங்கள், சுற்றுப்பிரயாணங்கள், புகழ் பெறும் ஸ்டண்டுகளில் எல்லாம் ஈடுபட்டு விடலாம். இதனால் கட்சி, தலைவர், நீங்கள். நான், நம்ம லட்சியம் - எல்லோருக்கும் எல்லாவற்றுக்குமே நல்லது என்று வழி வகுத்துக் காட்டினார் அன்பர். அவ்விதம் செய்யத் தயங்கவில்லை முதலாளி புன்னைவனம் நம்ம கட்சிப் பிரசாரத்திற்காக ஒரு பத்திரிகை தேவை. இது நமக்குப் புகழ்பாடும். நமக்கு வேண்டாதவர்களைப் பற்றி வசைபாடும். ஆரம்பிக்கலாமா?' என்று விதை துவினார் முதலாளியின் மூளையாகப் பணி புரிந்த சிவசைலம், 'உம் யோசித்துத் தான் செய்யனும் என்று இழுத்தார்செல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/101&oldid=841301" இலிருந்து மீள்விக்கப்பட்டது