பக்கம்:செவ்வானம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 111 ஆனால் அவளாக முன்வந்து நிற்கிறாளே! அவளைப்பற்றிக் கனவிலேகூடநினைக்காதபோது ஆகவே அவன்திகைத்துநின்றான். அப்படி நின்றதே களைப்புத் தருவதாகயிருந்தது. மயங்கிக் கீழே விழுந்தவிட நேரிடும் என்று தெரிந்ததும் அவன் அங்கேயே தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்துவிட்டான், தலையைக் கையினால் தாங்கியபடி வேண்டாத சனியன் தானாகத்தேடி வந்து உறவு கொண்டாடு கிறது என்று நினைக்கிறீர்களா? என்று கேட்க வேண்டும் என மனதில் ஒத்திகை நடத்தி வைத்திருந்த குமுதம் தனது வசனத்தை மறந்துவிட்டு 'என்ன? ஏனிப்படி? என்று பதட்டமடைந்தாள். அவன் பேசாமல் தலையை முழங்காலில் அமர்த்தி முட்டைக்கட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டது அவளுக்குக் கலக்கமளித்தது. தன்னைச் சமாளித்துக்கொண்டு பதில் சொல்ல அவனுக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது. தனது பலவீனத்திற்காக வெட்கினான் அவன். அவனது நிலைமையை அறிந்து அவள் இரக்கம் கொண்டாள். அவன் வேதனை அவளது துயர ஏக்கத்தை மறந்துவிடச் செய்தது, 'என்ன நீங்கள் இப்படியாயிருப்பது, உடம்பைக் கெடுத்துக் கொண்டு? மருந்து சாப்பிடாமல், சாப்பாடுமில்லாமல் ஐயோ. உங்களைப் பார்க்கச் சகிக்கலியே' என்று பரிதவித்தாள் அவள். 21 அவன் வியாதி இல்லாமலிருந்தால் இல்லையம்மா, நீங்க என்னைப் பார்த்துத்தான் ஆகணும்னு உங்களை யாராவதுதாம்பூலம் வைத்து அழைத்தாங்களா? போ போ, வேலை மெனக்கட்டவளே! என்று சீறிச் சிரித்திருப்பான். இப்பொழுது அவனுக்குப் பேசக்கூட மனமில்லை. மெளனமாகவே அமர்ந்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/113&oldid=841321" இலிருந்து மீள்விக்கப்பட்டது