பக்கம்:செவ்வானம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 115 போய்விட்டாள். மறுமுறை வந்தபொழுதும் கதவு மூடியே கிடந்தது வெகுநேரம் காத்து நின்றும், பலமுறை தட்டிப்பார்த்தும் உள்ளே யிருந்து எவ்விதமான சத்தமும் வராததனால் அவள் பயந்து விட்டாள். ஒருவேளை தாமோதரன் உள்ளே செத்துக்கிடக்கலாமோ என்ற திகில் ஏற்பட்டது அவளுக்கு அதனால் ஓயாது தட்டிக் கொண்டிருந்தாள். அது தனி வீடு. பக்கத்தில் வீடுகளோ, ஜன சஞ்சாரமோயில்லை. இருந்திருந்தால் அவளைப்பற்றி, அவள் அங்கு காத்து நிற்பதைப் பற்றி மனம்போன போக்கில் மதிப்பிட்டிருப்பார்கள். அவ்வேளை யில் குமுதம் எதைப்பற்றியுமே கவலைப்படவில்லை. அறையினுள் ஆழ்ந்ததுயில் பயில்பவனின் நெடுமூச்சு கூடக் கேட்கவில்லை என்ற உணர்வு எழுப்பிய அர்த்தமற்ற கலவரம்தான்நிறைந்திருந்தது அவள் உள்ளத்திலே, அந்தக் குழப்பம் அதிகரித்தது. தாமோதரனின் நிலைமையை அறிந்ததும். அவனுக்காக அவள் மிகவும் வருந்தினாள் என்ன செய்யலாம்? அவனுக்கு அப்பொழுது என்ன தேவைப்படும்? என்று புரியாமல் திகைத்தாள். காப்பியோ, ரொட்டியோவாங்கி வரலாம் என நினைத்தாள். ஆயாசம் சிறிது அடங்கியதும் தாமோதரன் கேட்டான். செளக்கியம் தானா? வாழ்க்கை எப்படியிருக்கிறது? 'நம்மைப் போன்றவர்கள் செளக்கியமாக வாழ்கிறோம் என்று திருப்தியுடன் சொல்ல முடியுமா என்ன? ப்சு, இருக்கு என்று இழுத்தாற் போல்தான் பதில் சொல்லணும்' என்றாள் அவள், சூழ்நிலையை ஆராய்ந்தபடி ஐயோ, குப்பையும் கிப்பையும். சே, ரொம்ப நாட்களாகச் சுத்தப்படுத்தவேயில்லைன்னு தெரியுது என மனம் முனங்கியது. 'அது சரி. வாழ்வது...' என்று தொடங்கினான். அவன் சோர்வினாலோ அல்லது அநாவசியக் கேள்வி என்ற எண்ணத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/117&oldid=841325" இலிருந்து மீள்விக்கப்பட்டது