பக்கம்:செவ்வானம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.16 செவ்வானம் னாலோ அதை அப்படியே விட்டுவிட்டான். எனினும் கேட்க விரும்பியது என்ன என்பதை உணர்ந்துகொண்ட குமுதம் நீங்கள் காட்டிய வழியிலேதான் என்று முடித்தாள். அவனுக்கு விளங்கவில்லை. என்னது? என்றான். 'உங்கள் உயர்ந்த யோசனையைப் பின்பற்றியேதான் நான் வாழ்க்கை நடத்துகிறேன்' என்று சொன்னாள் அவள், முக மலர்ச்சியுடன், அவன் விழித்தான். நான் வழிகாட்டினேனா? அப்படி எனக்கு நினைவில்லையே. நான் யோசனையே சொல்லவில்லையே! 'நீங்கள் எனக்கென்று விசேஷமாக யோசனை சொல்ல வில்லைதான். ஆனால் உங்கள் எழுத்துக்களில் அரிய ஆலோசனை கள் நிறைய யிருக்கின்றன. அவற்றில் ஒன்று எனக்கு உபயோகப்பட்டது. . ரொம்ப சந்தோஷம். நீ கூட நான் எழுதுவதைப் படிக்கிறாயா குமுதம்? மகிழ்ச்சி. 'ஏன், நான் படிக்கக்கூடாதா? இல்லை, நான் படிக்க மாட்டேன் என்று எண்ணினிர்களா? ۔ பொதுவாக என் எழுத்துக்களை யாரும் படிப்பதில்லை என்ற நம்பிக்கை எனக்கு." பின் நீங்கள் ஏன் எழுதுகிறீர்களாம்? என்று கேட்டாள் அவள். 'என்னால் எழுதாமல் இருக்க முடியாது. அத்துடன் எழுது வதற்கும் ஏராளமான விஷயங்கள் அகப்படுகின்றன. அதனால்தான். நான் எழுதுகிறவற்றை படிக்கும் சிரமத்தை யாராவது எடுத்துக் கொள்கிறார்களா என்று ஆராய எனக்கு நேரமில்லை. ஆசையு மில்லை. படித்தால் படிக்கிறார்கள். படிக்காவிட்டால் போகிறார்கள்! என்று கூறிச் சுவரில் சாய்ந்தான் அவன். அவளிடம் சொன்னான். 'நிற்கிறாயே, உட்காரேன் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/118&oldid=841326" இலிருந்து மீள்விக்கப்பட்டது