பக்கம்:செவ்வானம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் iこ3 ‘ஹஹ, புத்தகம் படிக்கிறாயாக்கும்? என்ன புத்தகம் அது? ஒ. இந்தக் குப்பையா? என்று கனைத்தார் அவர் அவள் இதயத்திலே அனல்துண்டு விழுந்து சுட்டதுபோலிருந்தது கொதித்த உள்ளம்கடச் சுடச் சொல்லெறியவேண்டும் என்று துடித்தது ஆனால் அவசரமும் ஆத்திரமும் எடுத்த எடுப்பிலேயே துணைபுரியாது என அறிவு குறுக்கிட்டுத் தடைபோட்டது ஆமாம். அவன் அன்பளிப்பாகக் கொடுத்திருப்பான் அவன் எழுதுகிறவைகளை அப்படித்தானே விநியோகிக்க வேண்டும்: காக கொடுத்துப் புத்தகம் வாங்குகிறவர்கள் எங்கேயிருக்கிறார்கள் நம்ம ஊரிலே?" என்று சொல்லிவிட்டு, ஏதோ பிரமாத அற்புதத்தை உதிர்த்துவிட்டவர்போல் சிரித்தார் அவர். - 'இது நான் விலைகொடுத்து வாங்கிய புத்தகம் யாரும் எனக்குச் சும்மா தரலே என்றாள் குமுதம், சிடுசிடுப்புத் தொனித்தது அவள் குரலில், "பரவால்லியே. நீ புத்தகம் கூட வாங்குறியா? பேஷ் ஆனால். உம். சொல்லவந்ததைச் சொல்லாமலே நிறுத்திவிட்டு அங்கு மிங்கும் பார்த்தார் அவர். ஆனால் என்ன? சொல்லவேண்டியதைச் சொல்லி விடுங்களேன்! 'இந்தச்சாக்கடைத்தாளைக் காசுகொடுத்து வாங்கவேண்டுமா நீ தாமோதரனிடம் கேட்டிருந்தால் ஒசிக் காப்பி ஒன்று கொடுத்திருப் பானே என்று சொல்ல நினைத்தேன். வீணாக நான் ஏன் அப்படிச் சொல்லனும் என்று நிறுத்திவிட்டேன். நீ கேட்டதினாலே சொல்ல நேர்ந்தது. "கழுதைகளுக்குக் கரும்பு ருசி எப்படித் தெரியும்?' என்று முனங்கினாள் குமுதம், 'என்னது? என்ன சொன்னே? என்று சீற்றக் குரல் கொடுத்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/135&oldid=841345" இலிருந்து மீள்விக்கப்பட்டது